பிரான்சில் இருந்து 28 டன் மருத்துவ பொருட்கள் டெல்லி வந்தன

புதுடெல்லி:

கொரோனாவின் 2-வது அலையால் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் இந்தியாவுக்கு பல்வேறு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அந்தவகையில் பிரான்சில் இருந்து சரக்கு விமானம் ஒன்றில் 28 டன் மருந்து மற்றும் தளவாடங்கள் நேற்று டெல்லி வந்து சேர்ந்தன.

இதில் முக்கியமாக 8 ஆக்சிஜன் உற்பத்தி அலகுகள், 28 வென்டிலேட்டர்கள், 200 எலக்ட்ரிக் சிரிஞ்சுகள் உள்ளிட்டவை அடங்கியுள்ளன. இந்த ஆக்சிஜன் அலகுகள் மூலம் 250 படுக்கைகள் கொண்ட ஒரு ஆஸ்பத்திரிக்கு தேவையான ஆக்சிஜனை 24 மணி நேரமும் தயாரிக்க முடியும். மேலும் வளிமண்டலத்தில் இருந்தே இந்த ஆக்சிஜனை இந்த அலகுகள் பெற்றுத்தர முடியும்.

உடனடியாக பயன்படுத்தும் வகையில் பிரான்சில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவ பொருட்கள் அனைத்தும் ரூ.17 கோடிக்கு மேல் மதிப்புடையவை என கூறியுள்ள இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனைன், கடினமான நேரத்தில் பிரான்சுக்கு இந்தியா அளித்த உதவிக்கு கைமாறாக இவை வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.