புதுச்சேரி தேர்தல் முடிவுகள்: என்.ஆர். காங்கிரஸ் முன்னிலை!

புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி, முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது. என்.ஆர். காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், காங்கிரஸ் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.  
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஓரணியாகவும், என்ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக கட்சிகள் ஓரணியாகவும் போட்டியிட்டன. வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரத்தில் இந்த இரு அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.