மகத்தான வெற்றியைப் பெற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் – டெல்லி முதல்வர் ட்வீட்

புதுடெல்லி:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று காலை 8 மணி முதல் தொடர்ந்து, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆரம்ப முதலே திமுக கூட்டணி முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணி 149 இடங்களிலும், அதிமுக கூட்டணி 84 இடங்களிலும், மக்கள் நீதி மய்யம் 1 இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது.
இதில் திமுக நேரடியாக 115 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதுபோன்று திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 17, மதிமுக 4, சிபிஎம் 2, சிபிஐ 2, விசிக 4, மற்றவை 5 என மொத்தம் 149 தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. இதனால் திமுக தொண்டர்கள் வெற்றியை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். கிட்டத்தட்ட வெற்றி நெருங்கிய நிலையில், மு.க.ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
கோப்பு படம்.
இருப்பினும், இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை, இன்னும் சில சுற்றுகள் முடிந்த பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மகத்தான வெற்றி பெற்ற முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.
அவரது பதிவில், தமிழக சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றிபெற்றுள்ள முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என்றும் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வெற்றிகரமாக ஆட்சியை நடத்த வாழ்த்துகிறேன் எனவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.