மீண்டும் பொது முடக்கமா? புதிய அரசு எடுக்கும் உடனடி நடவடிக்கை!

ஹைலைட்ஸ்:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 19 ஆயிரத்தை எட்டியுள்ளது
60,000 வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல்
கட்டாயமாகிறதா முழு பொது முடக்கம்?

அடுத்து யார் ஆட்சிக்கு வரப் போகிறார்கள் என்பது இன்று தெரிந்துவிடும். யார் வந்தாலும் அவர்களுக்கு தற்போது இருக்கும் மிகப் பெரிய சவால் கொரோனா பரவல்தான்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப் போகிறது,
பொது முடக்கம்
மீண்டும் அமல்படுத்தப்படுமா என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.

கடந்த ஆண்டு தினசரி கொரோனா பாதிப்பின் அதிகபட்ச எண்ணிக்கை சுமார் 7000 என்ற அளவில் இருந்தது. அப்போதே முழு பொது முடக்கம் கறாராக பின்பற்றப்பட்டது. அதேசமயம் மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

TN Election Results 2021: நெருங்கும் அதிமுக! முக்கிய பிரபலங்களின் நிலை இப்படியாகிப் போச்சே!

கொரோனாவின் இரண்டாவது அலை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இந்தியாவை பந்தாடிவருகிறது. இதில் தமிழ்நாடும் விதிவிலக்கல்ல.
கொரோனா பாதிப்பு
தினசரி புதுப்புது உச்சங்களை எட்டி வருகிறது.

பாதிப்பு அதிகரித்தாலும் முழு பொது முடக்கம் என்ற ஆயுதத்தை பயன்படுத்த காபந்து அரசு தயங்கியது. அதிகாரிகளும் அந்த முடிவை அடுத்த அரசு அமையும் வரை தற்காலிகமாக தள்ளிவைத்தனர். 18,000 பாதிப்புகள் பதிவானால் முழு பொது முடக்கம் அறிவிக்கப்படும் என்ற தகவல் சில தினங்களுக்கு முன் கோட்டை வட்டாரத்திலிருந்து வந்தது.

அடுத்த அரசு அமைவதற்கும் இந்த அளவு பாதிப்பை எட்டுவதற்கும் சரியாக இருக்கும் என்ற கணக்கில் கூறப்பட்டதா என தெரியவில்லை. ஆனால் தமிழக பாதிப்பு தற்போது 19ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இது மட்டும் அல்லாமல் நேற்று கொரோனா சிறப்பு அதிகாரி அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை கூறினார். அதாவது தமிழ்நாட்டில் பாதிப்பு 60,000 வரை எட்டும் என்று கூறியுள்ளார்.

துணை முதல்வர் ஓபிஎஸ் பின்னடைவு; ஷாக் கொடுத்த தங்கதமிழ்ச்செல்வன்!

இந்நிலையில் இவ்வளவு பாதிப்பு வரும் போது புதிய அரசு எப்படி சமாளிக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அடுத்த முழு பொது முடக்கத்தை மக்களால் தாங்க முடியாது, பொது முடக்கம் தீர்வல்ல என்பதாக அறிக்கைகள் வாயிலாக தெரிவித்து வந்தார். இதனால் திமுக ஆட்சியமைந்தால் முழு பொது முடக்கத்துக்கு வாய்ப்பு இருக்காது என்ற பேச்சு நிலவுகிறது.

அதிமுக ஆட்சியமையும் பட்சத்தில் கடந்த ஆண்டு பெற்ற அனுபவத்தின் படி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தொடரவே வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.

கொளத்தூர் தொகுதியில் திடீர் ட்விஸ்ட்; கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்!

இருந்தாலும் இவை அனைத்தும் கொரோனா தன் கோரமுகத்தை உக்கிரமாக காட்டும் வரைதான். தற்போதே அதற்கான அறிகுறிகள் முழுதாக தெரிந்துவிட்டன. தினசரி கொரோனா உயிரிழப்பு 150ஐ நெருங்கியுள்ளது.

இதனால் தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சி அமைந்தாலும் மிக கடுமையான கட்டுப்பாடுகளையோ அல்லது குறுப்பிட்ட காலத்திற்கு முழு ஊரடங்கையோ விதிக்கும் என்பதே தற்போதைய நிலை என்கின்றனர் கோட்டை வட்டாரத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.