வைரலாகும் ஏ.எல். விஜய் குடும்ப போட்டோ: மீண்டும் உருளும் தனுஷ் தலை

ஹைலைட்ஸ்:

ஏ.எல். விஜய், மனைவி, மகன் புகைப்படம் வைரல்
மீண்டும் பழைய விஷயங்களை பற்றி பேசும் ரசிகர்கள்
கொரோனாவால் தள்ளிப் போன தலைவி பட ரிலீஸ்

இயக்குநர் ஏ.எல். விஜய்யும், அமலா பாலும் காதலித்து கடந்த 2014ம் ஆண்டு இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்கள். இதையடுத்து அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரிந்துவிட்னர். அதன் பிறகு விவாகரத்து பெற்றனர்.

விவாகரத்திற்கு பிறகு பெற்றோர் பார்த்து வைத்த டாக்டர் ஐஸ்வர்யாவை மணந்தார் ஏ.எல். விஜய். ஐஸ்வர்யா, விஜய் தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் விஜய், ஐஸ்வர்யா தங்கள் செல்ல மகனுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் விஜய்யும், அமலா பாலும் பிரிந்தது குறித்து மீண்டும் பேசத் துவங்கியுள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க
அமலா பால்
ஆசைப்பட்டதால் தான் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் அமலா பாலும், விஜய்யும் பிரிய
தனுஷ்
தான் காரணம் என்று தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன் தெரிவித்தார்.

சும்மா இருந்த அமலா பாலுக்கு மீண்டும் படங்களில் நடிக்கும் ஆசையை காட்டினார் தனுஷ். அதன் பிறகே அமலா பால் மீண்டும் நடிக்கத் துடித்தார் என்றார் விஜய்யின் அப்பா அழகப்பன். விஜய்யின் குடும்ப புகைப்படம் வைரலாகியுள்ள நேரத்தில் தனுஷ் பெயர் மீண்டும் அடிபடுகிறது.

விஜய்யுடன் சேர்ந்து வாழ அமலா பாலுக்கு கொடுத்து வைக்கவில்லை. அவர் பிரிந்து சென்றது விஜய்க்கு நல்லது தான் என்று சமூக வலைதளவாசிகள் தெரிவித்துள்ளனர்.

கெரியரை பொறுத்தவரை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்கிற பெயரில் படமாக்கியிருக்கிறார் விஜய். அந்த படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடித்துள்ளார். அரவிந்த்சாமி எம்.ஜி.ஆராக நடித்திருக்கிறார்.

தலைவி படத்தை ஏப்ரல் 23ம் தேதி வெளியிட முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டார்கள். ஆனால் கொரோனாவின் இரண்டாம் அலை சுனாமியாக மாறியிருப்பதால் தலைவி ரிலீஸை தள்ளி வைத்திருக்கிறார்கள்.

துபாய் தொழில் அதிபருக்கு மனைவியாகப் போகும் அனுஷ்கா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.