ஸ்டாலின் ஜாதகத்துல முதலமைச்சர் அம்சம் இல்லனு சொன்னாங்களே.. இப்போ? நக்கலடிக்கும் இயக்குநர்!

|

சென்னை: ஸ்டாலின் ஜாதகத்தில் முதல்வர் அம்சம் இல்லை என்று கூறியவர்கள் இப்போது என்ன சொல்ல போகிறார்கள் என பிரபல இயக்குநர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றுள்ளன.

இந்த வெற்றியின் மூலம் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. முக ஸ்டாலின் முதல் முறையாக தமிழகத்தின் முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்

அவருக்கு பிரதமர் மோடி முதல் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மூடர் கூடம் படத்தின் இயக்குநர் நவீன் முகமதலி, முதல்வர் ஸ்டாலின் என பதிவிட்டு வாழ்த்து தெரிவித்தார்.

விளாசும் இயக்குநர்

அதனை தொடர்ந்து தற்போது ஒரு பதிவை ஷேர் செய்து, ஸ்டாலின் ஜாதகத்தில் முதல்வராகும் ராசியில்லை என்று கூறியவர்களை விளாசியுள்ளார். அதிமுக அமைச்சர்கள் பலமுறை ஸ்டாலின் ஜாதகத்தில் முதல்வராகும் அமைப்பு இல்லை என்று கூறி வந்தனர்.

ஜாதகத்தில் அம்சம் இல்லை

அதனை விமர்சிக்கும் வகையில் மூடர்கூடம் நவீன் முகமதலி பதிவிட்டிருப்பதாவது, ஸ்டாலின் ஜாதகத்தில் முதலமைச்சர் அம்சம் இல்லை என்று கூறியவர்கள் இப்போது என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஜாதகம் ஜோசியம் எல்லாம் பொய் என்று நிரூபிக்க வாய்ப்பளித்த அவர்களுக்கும், நிரூபித்து காட்டிய ஸ்டாலின் மற்றும் தமிழக மக்களுக்கும் நன்றிகள். இது பகுத்தறிவு மண் என பதிவிட்டுள்ளார்.

அவங்களுக்கு பாடம் எடுங்க

இயக்குநர் நவீன் முகமதலியின் இந்த பதிவுக்கு வரவேற்பும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. அவரது இந்த பதிவை பார்த்த இந்த நெட்டிசன், திருமதி துர்க்கா ஸ்டாலின் அவர்களுக்கு இந்த பகுத்தறிவு பற்றி பாடம் எடுங்க சகோ.. என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.