25 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையை மொத்தமாக வெல்லப்போகும் தி.மு.க!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதுவரை வெளியான முடிவுகளின்படி தி.மு.க கூட்டணி 158 இடங்களிலும் அ.தி.மு.க கூட்டணி 76 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. அவற்றில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் விதமாக சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி முன்னணியில் இருக்கிறது.

சென்னை மாவட்டத்தில், ஆர்.கே, நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க நகர், எழும்பூர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணா நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய 16 தொகுதிகள் இருக்கின்றன. இதில் வேளச்சேரியைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் தி.மு.க வேட்பாளர்களே போட்டியிடுகின்றனர். வேளச்சேரியில் மட்டும் காங்கிரஸ் போட்டியிட்டது.

ஸ்டாலின்

இதற்கு முன்பாக, 1996 தேர்தலில், த.மா.காவுடன், தி.மு.க கூட்டணி அமைத்துப் போட்டியிட்டபோதுதான் ஒட்டுமொத்தமாக சென்னை மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளையும் அந்தக் கூட்டணி கைப்பற்றியது. அதற்குப் பிறகு தற்போதுதான், போட்டியிட்ட அனைத்துத் தொகுதியிலும் வெல்வதற்கான வாய்ப்பு தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக்கு இருப்பதாகத் தெரிகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.