81 இடங்களில் முன்னிலை: அசாமில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு!

அசாம் மாநில சட்டமன்றத் தேர்தலில் தற்போது ஆட்சியில் உள்ள பாஜகவே மீண்டும் ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.
அசாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 126 சட்டமன்றத் தொகுதிகளில், பாஜக 81 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 45 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. இதன் காரணமாக ஆட்சியின் பெரும்பான்மைக்கு தேவையான 64 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை வகிப்பதால், அக்கட்சியே மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது.
அசாம் மாநிலத்தில் தற்போது பாஜகவின் முதல்வராக உள்ள சர்பானந்த சோனோவால் மீண்டும் முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அசாமில் சிஏஏ குடியுரிமை சட்ட பிரச்னை பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுவந்த நிலையில் மீண்டும் பாஜகவே ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.
image
அசாம் மாநில தேர்தல் களத்தில் பாஜக கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது. இத்தேர்தலில் பாஜக கூட்டணியில் அசாம் கனபரிசத், யுபிபிஎல் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. காங்கிரஸ் கூட்டணியில் ஏயுடிஎஃப், போடோலாந்து மக்கள் முன்னணி, சிபிஎம், சிபிஐ , சிபிஐ( எம்-எல்), அஞ்சாலிக் கன மோர்சா மாற்று ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.