அதிமுக சார்பில் போட்டியிட்ட 11 அமைச்சர்கள் தோல்வி.!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலையில் தொடங்கி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் திமுக முன்னிலை பெற்றாலும் அதிமுகவும் கடுமையான போட்டியை தந்தது. எனினும் நேரம் செல்ல செல்ல திமுக அதிக இடங்களில் வென்ற வெற்றியை உறுதி செய்தது.

 தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணியில் முன்னணி மற்றும் வெற்றியுடன் சேர்த்து 158 இடங்களை கைப்பற்றும் நிலை உள்ளது. ஆளும் அதிமுக கூட்டணி 76 தொகுதிகளில் மட்டும் பெற்று ஆட்சியைப் பறிகொடுத்தது. அதிமுக 68 இடங்களிலும், பாமக 5 இடங்களிலும், பாஜக 4 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உட்பட 16 அமைச்சர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அமைச்சர் ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்ட பல அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர். தமிழக அமைச்சர்கள் முதலமைச்சர் உட்பட 30 அமைச்சர்கள் இருந்தனர். அமைச்சரவை அமைச்சர்கள் நிலோஃபர் கபீல், வளர்மதி, பாஸ்கரன் ஆகியோர் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மற்ற 27 அமைச்சர்கள் போட்டியிட்டனர். 

அதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராயபுரம் – ஜெயக்குமார், ஆவடி –  க.பாண்டியராஜன், மதுரவாயல் – பென்ஜமின், விழுப்புரம் – சி.வி.சண்முகம், கடலூர் – எம்.சி.சம்பத், சங்கரன்கோவில் – ராஜலட்சுமி, திருச்சி கிழக்கு – வெல்லமண்டி நடராஜன், ராஜபாளையம் – ராஜேந்திர பாலாஜி, ஜோலார்பேட்டை – கே.சி.வீரமணி, ராசிபுரம் – சரோஜா, கரூர் – எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகிய 11 அமைச்சர்கள் வெற்றிவாய்ப்பை இழந்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.