அனைவருக்கும் தடுப்பூசி மத்திய அரசு திட்டம் என்ன?| Dinamalar

புதுடில்லி:’நாடு முழுவதும் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கு வது தான் இலக்கு; அதற்கான நடவடிக்கைகள், முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ என, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை, நாடு முழுவதும் தீவிரமாக உள்ளது. இந் நிலையில், ஆக்சிஜன், மருந்துகள், தடுப்பூசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுபாடு தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. ‘தடுப்பூசி தொடர்பான தேசிய திட்டம் ஏதும் உள்ளதா’ என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

அதற்கு பதிலளித்து, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: நாட்டில் உள்ள அனைவருக்கும், 100 சதவீதம் தடுப்பூசி வழங்க வேண்டும் என்பது தான் மத்திய அரசின் இலக்கு. மிகக் குறைந்த காலத்தில் இதை செய்ய வேண்டும் என, மத்திய அரசு விரும்புகிறது. நாடு முழுவதும், 18 – 44 வயதுக்குட்பட்ட, 59 கோடி பேருக்கு மட்டும், 122 கோடி தடுப்பூசி, ‘டோஸ்’ தேவைப்படுகிறது.

தற்போது நாட்டில், ‘கோவாக்சின், கோவிஷீல்டு’ என்ற இரண்டு தடுப்பூசிகள் மட்டுமே பயன் பாட்டில் உள்ளன. ரஷ்யாவைச் சேர்ந்த, ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி பயன்படுத்த அனுமதிக்கப் பட்டுள்ளது. தற்போது அந்த தடுப்பூசி, இறக்குமதி செய்யும் பணி துவங்கியுள்ளது. ஜூலையில் இருந்து, நம் நாட்டிலேயே அதன் தயாரிப்பு துவங்கும்.மற்ற நாடுகளால் ஒப்புதல் அளிக்கப் பட்டு, அங்கு பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளை இங்கு பயன்படுத்தவும் அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் பேசி வருகிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.