அஸ்ஸாம் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியமைக்கிறது பாரதிய ஜனதா கட்சி..!

ஸ்ஸாம் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

126 தொகுதிகளைக் கொண்ட அசாம் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பாரதிய ஜனதா கட்சி தனியாக 60 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சிகள் 25 இடங்களில் வெற்றி பெற்றன. முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் 29 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சிகள் 12 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இதன் மூலம் அம்மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனையடுத்து அஸ்ஸாமின் முதலமைச்சராக சர்பானந்த சோனாவால் மீண்டும் தேர்வு செய்யப்படுகிறார். பாஜக சார்பில் மக்களவை உறுப்பினராக இருந்த சோனாவால், மோடி அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.