ஆக்சிஜன் சேவைக்காக பைக்கை விற்கும் ஹர்ஷவர்தன் ரானே

ஆக்சிஜன் சேவைக்காக பைக்கை விற்கும் ஹர்ஷவர்தன் ரானே

03 மே, 2021 – 12:44 IST

தெலுங்கில் ‘அனாமிகா, பிடா, கவசம்’ உள்ளிட்ட சில படங்களிலும், ஹிந்தியிலும் நடிப்பவர் ஹர்ஷவர்தன் ரானே. தற்போது இரண்டு ஹிந்திப் படங்களிலும், ஒரு தெலுங்குப் படத்திலும் நடித்து வருகிறார். தற்போது கொரோனாவின் தீவிர பரவல் காரணமாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் கிடைக்க தன்னால் முடிந்த உதவிகளைச் செய்ய, தன்னுடைய பைக்கை விற்கிறேன் என அறிவித்துள்ளார்.
“சில ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்களை வாங்குவதற்காக என்னுடைய மோட்டார் சைக்கிளை தருகிறேன். இப்போதைய கோவிட் தேவைக்கு மக்களுக்கு இதை இணைந்து வழங்குவோம். ஐதராபாத்தில் சிறந்த ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்களை எங்கு கிடைக்கும் என்பதைத் தெரிவியுங்கள்,” என தன்னுடைய இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு ஆலோசனை தெரிவித்த ஒரு ரசிகர், “உங்களது ஆட்டோகிராபையா அல்லது உங்களால் தொடர்பு கொள்ள முடியும் சில பிரபலங்களின் ஆட்டோகிராபையோ போட்டு பைக்கை அதிக விலைக்கு விற்க முயற்சி செய்யுங்கள், இன்னும் அதிகமான சிலிண்டர்களை வாங்கலாம்,” என தெரிவித்துள்ளார்.
ஹர்ஷவர்தனின் இந்த சேவைக்கு ரசிகர்கள் லைக் அளித்து வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.