இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் முதலமைச்சராக மூன்றாவது முறையாகவும் மம்தா பெனார்ஜி சத்தியப்பிரமாணம்

இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் முதலமைச்சராக மம்தா பெனார்ஜி நாளை மறுதினம் மீண்டும் சத்தியப்பிரமாணம். செய்துகொள்ளவுள்ளார்.

அவர்  மேற்கு வங்காளத்தின் மூன்றாவது முறையாகவும் முதலமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவிருக்கின்றமை சிறப்பம்சமாகும்.

 34 வருடங்களாக இடதுசாரி கட்சிகளின் கோட்டையாகவிருந்த மேற்கு வங்காளத்தின் நிர்வாகத்தை 2011ம் ஆண்டில் கைப்பற்றிய மம்தா பெனார்ஜி, 2016ம் ஆண்டில் மீண்டும் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் கடுமையான சவால்களுக்கு மத்தியில் தனிநபராக இருந்த மம்தா பெனார்ஜி இம்முறையும் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

இதேவேளை, தமிழ்நாட்டில் 10 வருடங்களின் பின்னர் திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறது. சட்டமன்றத்திற்கான 234 தொகுதிகளில் 159 தொகுதிகளை திராவிட முன்னேற்றக்கழகம் கைப்பற்றியிருக்கிறது.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவரான மு.க.ஸ்ராலின் தமிழ் நாட்டின் முதலமைச்சராக எதிர்வரும் சில நாட்களில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

கேரளா மாநிலத்தின் முதலமைச்சராக பினராய் விஜயன் இரண்டாவது முறையாகவும்  சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.