இப்படி ஒரு Camera Phone-க்கு தான் பல பேர் மரண வெயிட்டிங்; மே.22 சீக்கிரம் வா!

ஹைலைட்ஸ்:

ஒப்போ ரெனோ 6 சீரிஸ் அறிமுகமாகிறது
மொத்தம் 3 மாடல்கள்.
பிரீமியம் மாடலாக ரெனோ 6 ப்ரோ பிளஸ் வெளியாகலாம்.

ஒப்போ நிறுவனத்தின் அடுத்த கேமரா சென்ட்ரிக் ஸ்மார்ட்போன்களாக ரெனோ 6 தொடர் மாடல்கள் இந்த மாதத்தில் அறிமுகமாகும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு வேகத்துல Redmi Note 10 வாங்கிடாதீங்க; அப்புறம் ஃபீல் பண்ணுவீங்க!

புதிய ரெனோ தொடர் ஸ்மார்ட்போன்களின் வெளியீடு வருகிற மே 22 அன்று நடைபெறலாம், ஏனெனில் குறிப்பிட்ட நாளில் ஒப்போ நிறுவனம், சீனாவில் ஒரு (சிறப்பு கண்காட்சி) நிகழ்வை நடத்த உள்ளதாக நம்பப்படுகிறது.

அலெர்ட்! உங்க Phone-ல இதை ON பண்ணி வச்சி இருக்கீங்களா? உடனே OFF செய்யவும்!

பொதுவாக இந்த சீன நிறுவனம் அதன் சிறப்பு கண்காட்சிகளில் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திய வரலாற்றைக் கொண்டுள்ளது, எனவே இந்த ஆண்டின் நிகழ்வு வேறுபட்டதாக இருக்காது.

வதந்திக்கப்படும்
ஒப்போ ரெனோ 6
தொடரின் கீழ் குறைந்தது மூன்று மாடல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது – ரெனோ 6 ப்ரோ பிளஸ், ரெனோ 6 ப்ரோ மற்றும் ரெனோ 6.

சீனாவின் ஐடி ஹோம் வழியாக வெளியான அறிக்கையின்படி, இந்த மாத இறுதியில் புதிய ரெனோ-சீரிஸ் ஸ்மார்ட்போன்களைக் கொண்டுவர ஒப்போ திட்டமிட்டிருக்கலாம்.

சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒப்போ நிறுவனம் ஏற்பாடு செய்யும் கண்காட்சியானது பல பிரபலங்கள் கலந்து கொள்ளும் ஒரு கவர்ச்சியான நிகழ்வாகும். இது ஒப்போ நிறுவனத்தின் மிகவும் பிரபலமான ரெனோ தொடரின் அடுத்த மாடல்களை அறிவிக்க இது ஒரு நல்ல தருணம் போல் தெரிகிறது.

சந்தேகத்திற்கு இடமின்றி, ஒப்போ ரெனோ 6 தொடர் மாடல்கள் ரெனோ 5 தொடரின் “மேம்படுத்தப்பட்ட” வாரிசாக இருக்கும். இந்த இடத்தில் இந்தியாவுக்கு வந்த ஒரே ஒப்போ ரெனோ 5 தொடர் ஸ்மார்ட்போன் – ரெனோ 5 ப்ரோ 5ஜி மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

வரவிருக்கும் ஒப்போ ரெனோ 6 சீரிஸைப் பற்றி பேசுகையில், இந்த தொடரின் பிரீமியம் மாடலாக ரெனோ 6 ப்ரோ பிளஸ் இருக்கலாம்.

ரெனோ 6 ப்ரோ + ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 ப்ராசஸர் உடன் வரக்கூடும் என்று வதந்திகள் பரவுகின்றன, ஆக இது ரெனோ தொடரின் முதல் முதன்மை நிலை ஸ்மார்ட்போனாக வெளியாகும். மேலும் ரெனோ 6 ப்ரோ + ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை
ஒப்போ ரெனோ 6 ப்ரோ பிளஸ்
மாடல் ஆனது இந்தியாவில் ரூ.47,990 என்கிற புள்ளியை சுற்றி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிகாரபூர்வமான தகவல் அல்ல.

அடுத்தது
ஒப்போ ரெனோ 6 ப்ரோ
மாடல் – இது சற்றே குறைவான சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 870 ப்ராசஸர் மற்றும் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேவுடன் வரலாம்.

கடைசியாக உள்ள வெண்ணிலா ரெனோ 6 ஸ்மார்ட்போன் ஆனது மீடியா டெக் டைமன்சிட்டி 1200 ப்ராசஸர் உடன் 90 ஹெர்ட்ஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்.

இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் 4500 எம்ஏஎச் பேட்டரியுடன் 65W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 30W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வரக்கூடும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.