இலங்கையில் கடந்த மூன்று தினங்களில் ஆகக்கூடுதலான தொற்றாளர்கள் நேற்று பதிவு

இலங்கையில் கடந்த மூன்று தினங்களில் பதிவான கொரோனா வைரசு தொற்றாளர்களில் ஆகக்கூடுதலான தொற்றாளர்கள் நேற்றைய (01) தினம் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் எண்ணிக்கை 1 716. இவர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்த எண்ணிக்கை 375.
நேற்றைய (01) தினம் பதிவானவர்களில் மொத்த எண்ணிக்கையில் 17 பேர் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்கள் இடம்பெற்றிருப்பதாக கொவிட் 19 வைரசு பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இன்று (02 காலை தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் பதிவானவர்களில் 128 பேர் கொழும்பு மாநகர சபை எல்லைப்பகுதிக்குள் இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக பாதுக்க பிரதேசத்தில் 43 பேரும் பிலியந்தலவில் 19 பேரும் பொரலஸ்கமவில் 21 பேரும் ஹோமாகமவில் 15 பேரும் பன்னிப்பிட்டியவில் 13 பேரும் ராஜகிரியவில் 12 பேரும் பொரள்ளையில் 21 பேருமாக வைரசு தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.கம்பஹா மாவட்டத்தில் 247 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 158 பேருக்கும், காலி மாவட்டத்தில் 138 பேருக்கும், குருணாகல் மாவட்டத்தில் 108 பேருக்கும், கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் தலா 84 பேருக்கும் தொற்றுறுதியாகி உள்ளது.
நேற்றைய தினம் 15 மாவட்டங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 764 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை நேற்றையதினம் (01) புதுவருட கொத்தணி தொடர்பில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 1,697 பேர் அடையாளப்படுத்தப்பட்டனர். இவர்கள்கொழும்பு மாவட்டத்தில் 375 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 247 பேரும், காலி மாவட்டத்தில் 138 பேரும், குருணாகல் மாவட்டத்தில் 108 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 158 பேரும் இவ்வாறு இனங்காணப்பட்டனர்.

இந்நிலையில் இன்று காலை வரை கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக, அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 108,146 இலிருந்து 109,862 ஆக அதிகரித்துள்ளது. இதேபோன்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96,478 இலிருந்து 97,242 ஆக அதிகரித்துள்ளது.

அடையாளம் காணப்பட்ட 109,862 தொற்றாளர்களில், கடற்படை 906 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 950 பேர், கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் 597 பேர் உள்ளிட்ட அம்மையத்துடன் தொடர்புடைய 651 பேர் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 313 பேர், வெளிநாட்டவர் 298 பேர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்த இலங்கையர் 3,579 பேர் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வந்த 3,877 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். Brandix (தொழிற்சாலை ஊழியர்கள் 1,041 பேர் உள்ளிட்ட அக்கொத்தணியில் 3,059 பேர் (அனைவரும் குணமடைவு), பேலியகொடை மீன் சந்தையில் 1,007 பேர் உள்ளிட்ட மீன்சந்தை துறைமுக கொத்தணியில் 82,785 பேர், சிறைச்சாலை கொத்தணி 4,825 பேர், புதுவருட கொத்தணி 13,402 பேர், இதில் உள்ளடங்குகின்றனர்.

இலங்கையில் முப்படையினரால் நிருவகிக்கப்படும் 113 தனிமைப்படுத்தும் முகாம்களில் 11 ,212 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.