என்ன பண்றதுனே தெரியால… விஜய்டிவி தொகுப்பாளினி மருத்துவமனையில் அனுமதி !

|

சென்னை : விஜய் டிவி பிரபல தொகுப்பாளினி விஜே பிரியங்கா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரியங்கா விஜய் டிவியில் மட்டுமல்லாது, யூடியூப் சேனலிலும் கலக்கி வருகிறார்.

அந்த, சேனலில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், வயிறு கோளரால் சென்னையில் உள்ள ரீலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

தொகுப்பாளினி

விஜய் தொலைக்காட்சிகளில் நடைபெறும் ரியாலிட்டி ஷோக்கள் அனைத்து ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களுக்கு அதிக பார்வையாளர்கள் உண்டு. இந்த ஷோக்களின் மூலம் விஜய் டிவி ஆர்பி ரேட்டிங்கில் பல நாட்கள் முதலிடத்திலும் வந்துள்ளது.

பெரும் வரவேற்பு

பெரும் வரவேற்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சில ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளினி பிரியங்கா மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறார். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் கலகலப்பு புகுத்தி அதை வேறவெவல் டிரெண்டிங் ஆக்கி விடுவார் தொகுப்பாளினி பிரியங்கா.

மருத்துவமனையில் அனுமதி

இவர் தொகுத்து வழங்கி வந்த செம ஹிட் ஷோவான ஸ்டார்ட் மியூசிக் கலகலப்பாக தொகுத்து வழங்குவார். இந்த நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு என்று சொல்லலாம். தற்போது பிரியங்கா மருத்துவமனையில் வயிறு கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரே தனது யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

என்ன பண்றதுனே தெரியல

என்ன பண்றதுனே தெரியல

அந்த வீடியோவில், சென்னை ரீலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த இரண்டு நாளா அடிச்சி நவுத்திட்டு போய்கிட்டே இருக்கு, உடம்புல தேம்பு இல்ல, என்ன பண்றது ஏது பண்றதுனு தெரியல எதுனால இப்டி ஆச்சுனும் தெரிய அதன் இங்கே வந்து இருக்கிறேன். இங்கே குளுக்கோஸ் ஊசி எல்லாம் போட்டுக்கிட்டே இருக்காங்கா, என்னால பேசாம அமைதியாக இருங்க முடியல அதனால நான் உங்க கிட்டே பேசிக்கிட்டே இருக்கேன் என்று கூறியுள்ளார். விரைவில் பார்ட் 2 வரும் என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் அங்கே போனாலும் வாய் அடங்காவே இல்ல என்று கேட்டு வருகின்றனர். தற்போது அந்த வீடியோவை 2 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.