ஒரு வேகத்துல Redmi Note 10 வாங்கிடாதீங்க; அப்புறம் ஃபீல் பண்ணுவீங்க!

ஹைலைட்ஸ்:

ரெட்மி நோட் 10எஸ் இந்திய அறிமுகம் உறுதியானது
வருகிற மே 13-இல் அறிமுகமாகும்
ரெட்மி நோட் 10 தொடரின் மற்றொரு பட்ஜெட் மாடலாக திகழும்

சியோமி நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக ரெட்மி நோட் 10 எஸ் மாடல் வருகிற மே 13 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அலெர்ட்! உங்க Phone-ல இதை ON பண்ணி வச்சி இருக்கீங்களா? உடனே OFF செய்யவும்!

ஏற்கனவே வெண்ணிலா, ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் என்கிற மூன்று மாடல்களை கொண்ட இந்த தொடரின் கீழ் நான்காவது மாடல் அவசியமா? அமோகமாக சென்று கொண்டிருக்கும் மற்ற மாடல்களை விற்பனையை இது தடுக்குமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆன்லைன் வழியாக 0-5 வயது குழந்தைகளுக்கு ஆதார் கார்டு; பெறுவது எப்படி?

கடந்த காலங்களில் இந்த ஸ்மார்ட்போன் பல சந்தர்ப்பங்களில் லீக்ஸ் தகவல்களில் சிக்கியது, இப்போது சியோமி நிறுவனமே இதன் வருகையை உறுதிப்படுத்தியுள்ளது.

வழக்கம் போல் இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு நிகழ்வு நிறுவனத்தின் சமூக ஊடக சேனல்கள் வழியாக மட்டுமே நடக்கும்.

நினைவூட்டும் வண்ணம், ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போன் கடந்த மார்ச் மாதத்தில் உலகளவில் வெளியிடப்பட்டது, இது 6.43 இன்ச் புல் எச்டி + அமோலேட் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் ஹீலியோ ஜி 95 SoC மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது.

ரெட்மி நோட் 10 எஸ் இந்திய வெளியீட்டு விவரங்கள், எதிர்பார்க்கப்படும் விலை:

வரவிருக்கும் ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு நிகழ்வு மே 13 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு (நண்பகல்) தொடங்கும். இது Xiaomi யூடியூப் மற்றும் பிற சமூக ஊடக தளங்கள் வழியாக நேரடியாக ஒளிபரப்பப்படும்.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போன் ஆனது ரெட்மி நோட் 10 வரம்பில் எங்காவது ஒரு புள்ளியில் அமர வேண்டும். அதாவது இதன் ரூ.12,499-ஐ சுற்றி எங்காவதுஒரு புள்ளியில் விலை நிர்ணயத்தை பெறும்.

வெளியான சமீபத்திய டீஸரில், வரவிருக்கும் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் ஆனது ப்ளூ, டார்க் க்ரே மற்றும் பிளாக் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் டீஸ் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் 6 ஜிபி + 64 ஜிபி, 6 ஜிபி + 128 ஜிபி, மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி என மூன்று சேமிப்பக கட்டமைப்புகளில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:

இந்தியாவில் அறிமுகப்படவுள்ளட மாறுபாடு உலகளாவிய மாடலின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகளுடன் பொருந்தினால், ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போன் ஆனது…

– ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான MIUI 12.5

– 6.43 இன்ச் புல் எச்டி + (1,080×2,400 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே

– எஸ்ஜிஎஸ் லோ ப்ளூ லைட் சான்றிதழ்

– 1,100 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்

– மீடியாடெக் ஹீலியோ ஜி 95 SoC

– 8 ஜிபி வரை ரேம்

– 128 ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்

– குவாட் கேமரா அமைப்பி

– 64 மெகாபிக்சல் பிரதான கேமரா (எஃப் / 1.79)

– 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா (எஃப் / 2.2 மற்றும் 118 டிகிரி பீல்ட் ஆப் வியூ)

– 2 மெகாபிக்சல் மேக்ரோ (எஃப் / 2.4)

– 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் (எஃப் / 2.4)

– 13 மெகாபிக்சல் செல்பீ சென்சார் (எஃப் / 2.45)

– 5,000 எம்ஏஎச் பேட்டரி

– 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

– என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக், டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் வி 5

– எடையில் 178.8 கிராம்

– அளவீட்டில் 160.46×74.5×8.19 மிமீ.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.