ஓட்டு எண்ணும் மையங்களில் கொரோனா நெறிமுறையை கோட்டை விட்ட மாநகராட்சி

சென்னையில், கொரோனா தடுப்பூசி, இரண்டு தவணை போட்டவர்களும் அல்லது கொரோனா பரிசோதனை செய்து, தொற்றில்லை என்பவர்கள் மட்டுமே, ஓட்டு எண்ணும் மையங்களுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதனால், மூன்று மையங்களிலும், 5,000க்கும் மேற்பட்ட முகவர்கள் குவிந்தனர். மேலும், போலீசார், செய்தியாளர்கள், மாநகராட்சி சுகாதார பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள் என, பெரும்பாலானோர், ஒரே இடத்தில் குவிந்தனர்.மேலும், தொகுதி வாரியாக ஓட்டும் எண்ணும் மையங்களில், முகவர்கள், சமூக இடைவெளியின்றி குவிந்ததால், நெரிசலில் சிக்கி அனைவரும் தவித்தனர்.

கூட்டம் நெரிசல் காரணமாக, காற்றோட்டம் இல்லாமல், பலர் முக கவசத்தை, மூக்குக்கும், தாடைக்கும் கீழ் இறக்கி, மூச்சு வாங்கினர். இவர்களை ஒருங்கிணைத்து, சமூக இடைவெளியுடன் நிற்க வைக்கவும், மாநகராட்சி தவறியது. குறிப்பாக, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி கமிஷனருமான பிரகாஷ், சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர், அண்ணா பல்கலைக்கு ஆய்வு செய்தபோதும், முகவர்கள் சமூக இடைவெளியின்றி குவிந்திருந்தனர். இதன் காரணமாக, ஓட்டு எண்ணிக்கை மையங்களில் வந்தவர்களுக்கு, தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது..

சிற்றுண்டிக்கு தள்ளுமுள்ளுசேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, திரு.வி.க, நகர், ஆர்.கே.நகர், ராயபுரம், துறைமுகம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை, சென்னை ராணிமேரி கல்லுாரியில் நேற்று நடந்தது. அரசியல் கட்சி முகவர்களுக்கான காலை சிற்றுண்டி உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை. இது குறித்து, மாநகராட்சி ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினர். அவர்கள் உரிய பதில் அளிக்காததால், ‘நாங்கள் உணவுக்கு உரிய தொகையை ஏற்கனவே செலுத்தி தான், ‘டோக்கன்’ பெற்றுள்ளோம்.’ஏதோ அன்னதானம் செய்வதுபோல் அலட்சியப்படுத்துகிறீர்களே…’ என, நுாற்றுக்கணக்கானோர் கூடி முறையிட்டனர்.

இதனால், அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சமாதானப்படுத்தி, உணவை பெற்றுத் தந்தனர்.மூன்று கதவுகள் திறப்புசைதாப்பேட்டை தொகுதி, ஓட்டு எண்ணும் பணி, 14 மேஜைகளில் நடந்தது. விசாலமான அறையில், ஆறு கதவுகள் இருந்தன. இதில், மூன்று கதவுகள் மட்டுமே, முகவர்களுக்காக திறக்கப்பட்டிருந்தன.முகவர்கள் கூட்டம் குவிந்ததால், இடநெருக்கடி ஏற்பட்டது. இதனால், ஆறு கதவுகளும் திறக்கப்பட்டன. மேலும், ஓட்டு எண்ணும் மையங்களில், அவ்வப்போது கிருமி நீக்கம் செய்யப்பட்டதுஇடப் பற்றாக்குறையால் தவிப்புராணி மேரி கல்லுாரியில், ஓட்டு எண்ணும் மையங்கள், சிறிய வகுப்பறைகளில் அமைக்கப்பட்டிருந்தன.

கட்சி முகவர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு, இடைவெளியின்றி இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.இதனால், புழுக்கம் அதிகமிருந்தது. பலர், முக கவசம் அணியாமல் இருந்தனர். இது, கொரோனா பரவும் அச்சத்தை ஏற்படுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.