காதோல் திருமணம்.. 3 மாதம் குடித்தனம்.! கொடூரமாக பாலியல் பலாத்காரம்.. பெற்றோரிடம் கண்கலங்கி நின்ற சிறுமி.!!

திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அத்திப்பேடு காலனியை சார்ந்தவர் முனுசாமி. இவரது மகன் சரத் (வயது 22). சரத் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், இப்பகுதியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வரும் 16 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். 

சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறிய காமுகன் சரத், கடந்த டிசம்பர் மாதம் கடத்தி சென்றுள்ளான். பின்னர், அங்குள்ள பெரியபாளையம் அருகேயுள்ள கோவிலில் வைத்து தாலி கட்டிய நிலையில், செங்குன்றம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து 3 மாதம் குடித்தனம் நடத்தியுள்ளான்.

இதன்போது, சிறுமியிடம் பலமுறை ஆசை வார்த்தை கூறி அத்துமீறிய நிலையில், பலமுறை கட்டாயப்படுத்தியும் கொடூரமாக வன்கொடுமை செய்துள்ளான். இந்நிலையில், இவனது கொடுமை தாள இயலாது சிறுமி பெற்றோரின் இல்லத்திற்கு சென்று விஷயத்தை கூறவே, அவர்கள் மகளை கண்ணீருடன் ஏற்றுக்கொண்டு இருக்கின்றனர். 

மேலும், இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அத்திப்பேடு காலனியை சார்ந்த சரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.