கொரோனா ஒழிப்பில் அம்பானி, அதானியின் உண்மையான பங்கு என்ன..? டிவிட்டரில் வைரல் பதிவு..!

கொரோனா தொற்றுக் காரணமாக இந்தியா முழுக்கப் பல லட்சம் பேர் பாதித்துள்ள இந்தச் சூழ்நிலையில் மருந்து வாங்க முடியாமலும், மருத்துவமனை கட்டணத்தைச் செலுத்த முடியாமலும், ஏன் இறந்தவர்களை எரிக்கக் கூடப் பணம் இல்லாமல் தவித்து வரும் நிலை தான் இந்தியாவில் இருக்கிறது.

மே 2ஆம் தேதி மட்டும் இந்தியாவில் சுமார் 3,92,488 பேர் கொரோனா தொற்றுக் காரணமாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர், இதன் மூலம் தொடர்ந்து 29 நாட்கள் கொரோனா தொற்று எண்ணிக்கை தினமும் 1,00,000ஐ தாண்டியுள்ளது. இதோடு ஏப்ரல் மாதம் மட்டும் இந்தியாவில் சுமார் 50,000 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

ஓலாவின் பிரம்மாண்ட E-scooter திட்டம்.. விரைவில் வெளிநாட்டிலும் விற்பனை..!

இந்த நிலையிலும் பெரும் பணக்காரர்கள் நாட்டு மக்களுக்கு உதவ முன்வரவில்லை என்றும், உதவி செய்து வரும் நிறுவனங்களும் தங்களது CSR தொகையைத் தான் செலவு செய்து வருகிறார்கள் எனக் குவாட்ஸ் பத்திரிக்கையில் செய்தி தெரிவித்துள்ளது.

உலகிலேயே அதிகப் பில்லியனர்களைக் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது, அதிலும் சூப்பர் ரிச் பட்டியலில் சுமார் 140 பேர் கொண்ட நாடாக இந்தியா உள்ளது.

 சிறு வர்த்தகங்கள்

சிறு வர்த்தகங்கள்

கொரோனா தொற்று மூலம் இந்தியாவில் பல ஆயிரம் சிறு வர்த்தகங்களை மூட வைத்துள்ளது, இதன் மூலம் பெரும் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகி உள்ளார்கள். 2020ல் மட்டும் இந்தியாவில் புதிதாக 40 பில்லியனர்கள் உருவாகியுள்ளார்கள்.

 முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு

முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு

இந்திய மக்களையும் இந்திய பொருளாதாரத்தையும் பந்தாடிய கொரோனா தொற்றின் முதல் அலையில் காலகட்டத்தில் அதாவது 2020 இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 24 சதவீதமும், 2வது பெரும் பணக்காரரான கௌதம் அதானியின் சொத்து மதிப்பும் 74 சதவீதம் அதிகரித்துள்ளது எனக் குவாட்ஸ் தெரிவித்துள்ளது.

 

வைரல் டிவிட்டர் பதிவு

1. முகேஷ் அம்பானி மகாராஷ்டிர மாநிலத்திற்குத் தினமும் 100 டன் ஆக்சிஜன் வழங்குகிறார், ஆனால் உண்மையான ஆக்சிஜன் தேவையின் அளவு 15,000 டன். அம்பானி கொடுத்த ஆக்சிஜன் வெறும் 11 நிமிடம் மட்டுமே பயன்படுத்த முடியும்.

2. இந்த நன்கொடைக்கு வரிச் சலுகை பெற முடியும்.

3. ஆக்சிஜன்-ஐ விடவும் பிஆர்-க்கு அதிகம் செலவு செய்யப்பட்டு உள்ளதாகக் குவாட்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறப்பட்டு உள்ளது.

 நடுத்தர மற்றும் கீழ் தட்டு மக்கள்

நடுத்தர மற்றும் கீழ் தட்டு மக்கள்

இதேவேளையில் இந்தியாவின் நடுத்தர மற்றும் கீழ் தட்டு மக்கள் கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்குத் தன் குடும்பத்திற்காகவோ அல்லது நண்பர்கள், உறவினர்களுக்கு அதிகளவில் பணமாகவோ அல்லது உதவிகளாகவோ செய்து வருகின்றனர் எனவும் குவாட்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

 8 பிரைவேட் ஜெட்

8 பிரைவேட் ஜெட்

ஆனால் மறுபுறம் ஏப்ரல் 26ஆம் தேதி பிரிட்டன் இந்திய விமானங்களுக்குத் தடை விதிக்க 24 மணிநேரத்திற்கு முன்பு 8 பிரைவேட் ஜெட் மூலம் டெல்லி, மும்பை மற்றும் அகமதாபாத் ஆகிய 3 பகுதிகளில் இருந்து பெரும் பணக்காரர்கள் இந்தியாவை விட்டு லண்டனுக்குப் பறந்துள்ளனர்.

 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ஏப்ரல் 30ஆம் தேதி முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியாவிலேயே ஒரே இடத்தில் இருந்து அதிகப்படியாகத் திரவ ஆக்சிஜன் தயாரிக்கும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. 2020ல் ஆக்சிஜன் உற்பத்தியில் பூஜ்ஜிய அளவீட்டில் இருந்து தற்போது இந்தியாவின் மொத்த திரவ ஆக்சிஜன் தயாரிப்பில் 11% ரிலையன்ஸ் தயாரிக்கிறது.

 ஜாம்நகர் தொழிற்சாலை

ஜாம்நகர் தொழிற்சாலை

மேலும் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் ஜாம்நகர் தொழிற்சாலையில் இருந்து இலவசமாகப் பல மாநிலங்களுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் 10 கொரோனா நோயாளிகளில் ஒருவருக்குத் தங்களால் உதவ முடிகிறது எனத் தெரிவித்துள்ளது.

 முகேஷ் அம்பானி - அசிம் பிரேம்ஜி

முகேஷ் அம்பானி – அசிம் பிரேம்ஜி

2020ல் முகேஷ் அம்பானி ஒரு மணிநேரத்திற்கு 90 கோடி ரூபாய் அளவிற்குச் சம்பாதித்த நிலையிலும் அசிம் பிரேம்ஜி நன்கொடை அளித்த அளவிற்கு ஈடு செய்ய முடியவில்லை. 2020ல் அம்பானி கொடுத்த அளவீட்டை விடவும் 10 மடங்கு நன்கொடை கொடுத்துள்ளார் என ஹூரன் இந்தியா தெரிவித்துள்ளது.

 விப்ரோ அசிம் பிரேம்ஜி

விப்ரோ அசிம் பிரேம்ஜி

EdelGive ஹூரன் இந்தியாவின் Philanthropy பட்டியல் 2020படி, விப்ரோ அசிம் பிரேம்ஜி தனது அறக்கட்டளை, விப்ரோ, விப்ரோ எண்டர்பிரைசர்ஸ் ஆகிய நிறுவனங்களின் மூலம் ஒரு நாளுக்கு 22 கோடி ரூபாய் வீதம் சுமார் 7,904 கோடி ரூபாய் அளவிலான தொகையை நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.

 கௌதம் அதானியின் அதானி குரூப்

கௌதம் அதானியின் அதானி குரூப்

அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போல், கௌதம் அதானியின் அதானி குரூப் ஆக்சிஜன் போக்குவரத்திற்காக இந்தியா தடுமாறிக்கொண்டு இருந்த வேளையில், 5000 ஆக்சிஜன் சிலிண்டர்களை லின்டே சவுதி அரேபிய நிறுவனத்தில் இருந்து இந்தியாவிற்குக் கொண்டு வந்தது. இதேபோல் அதானி குழுமம் தாய்லாந்து மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் இருந்தும் ஆக்சிஜனை இறக்குமதி செய்துள்ளது.

 டாடா குழுமம்

டாடா குழுமம்

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் டாடா குழுமம் ஆக்சிஜன் பற்றாக்குறையைக் குறைக்கத் தனது டாடா ஸ்டீல் நிறுவனத்தின் வாயிலாகத் தினமும் 1000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தயாரித்துப் பல மாநிலங்களுக்கு வழங்குகிறது.

 சமூக வலைத்தளத்தில் விமர்சனம்

சமூக வலைத்தளத்தில் விமர்சனம்

பெரு நிறுவனங்களும், பெரும் பணக்காரர்களும் பல்வேறு உதவிகளைச் செய்துள்ள வேளையிலும் சமுக வலைத்தளத்தில் இவர்களின் நிலைக்குச் செய்துள்ள உதவிகள் மிகவும் குறைவானது என விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது எனக் குவாட்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.