கொல்கத்தா வீரர்களுக்கு உடல்நலக்குறைவு: இன்றைய ஆட்டம் ஒத்திவைப்பு?

 

கொல்கத்தா அணியைச் சேர்ந்த சில வீரர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் இன்று நடைபெறுவதாக உள்ள ஆர்சிபி – கேகேஆர் அணிகளின் ஆட்டம் ஒத்திவைக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கொல்கத்தா அணியைச் சேர்ந்த சில வீரர்களுக்கும் பணியாளர்களுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் கொல்கத்தா அணி வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இன்று நடைபெறுவதாக உள்ள ஆர்சிபி – கேகேஆர் அணிகளின் ஆட்டம் ஒத்திவைக்கப்படும் எனத் தெரிகிறது. ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் இத்தகவல் வெளியாகியுள்ளதால் பிசிசிஐ மற்றும் கேகேஆர் தரப்பில் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.