தங்கம் வாங்க இது சரியான நேரம் தான்.. உச்சத்தில் இருந்து 10 கிராமுக்கு ரூ.9000 சரிவு..!

சமீபத்திய நாட்களில் கொரோனாவுக்கு அடுத்து மிக பரபரப்பாக பேசப்பட்ட விஷயங்கள் தங்கம் விலையும் ஒன்று. ஏனெனில் கடந்த வாரம் முழுக்க தடுமாற்றத்தில் இருந்த நிலையில், இது இன்னும் குறையுமா? வாங்கலாமா? வேண்டாமா? என்ற பல கேள்விகள் எழுந்தன.

அதிலும் தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக இருக்கும் டாலரின் மதிப்பானது, தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகின்றது. இதனால் கடந்த வாரம் முழுக்கவே தங்கம் விலையானது தடுமாற்றத்தில் தான் காணப்பட்டது.

‘ஆக்சிஜன்’ நேரடி சப்ளை.. 2,500 பெட் கொண்ட புதிய கொரோனா வார்டு.. அசத்தும் இந்திய ஸ்டீல் அத்தாரிட்டி..!

அதோடு கடந்த வாரத்தில் ஜோ பைடன் நாம் மிகப்பெரிய தொற்று நோயை சந்தித்துள்ளோம். அதுவும் 1929-க்கு பிறகு மோசமான நெருக்கடியை சந்தித்துள்ளோம். எனினும் அமெரிக்கா முன்னேற்றத்தினை நோக்கி சென்று கொண்டுள்ளது. நெருக்கடி நிலையையும் நமக்கு ஏற்ற வாய்ப்பாக மாற்றி வருகிறோம் என்று கூறியுள்ளார்.

வர்த்தகபோருக்கு முடிவு வரப்போகின்றதா?

வர்த்தகபோருக்கு முடிவு வரப்போகின்றதா?

அதோடு சீனாவிடம் நாங்கள் மோதலை எதிர்பார்க்கவில்லை. போட்டியை வரவேற்கிறோம் என்று சீன அதிபரிடம் கூறியதாக ஜோ பைடன் கடந்த வாரத்தில் கூறியது நினைவுகூறத்தக்கது. இது சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகபோருக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்கலாம் என்பதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. உண்மையில் கடந்த சில ஆண்டுகளாக டொனால்டு டிரம்ப் அதிபராக இருந்த காலத்தில், இது அமெரிக்கா மற்றும் சீனா என இரு நாடுகளுக்கும் பெரும் பின்னடைவையே கொடுத்து வந்தது. ஆனால் இது விரைவில் முடிவுக்கு வரலாம் என்ற நிலையே தற்போது நிலவி வருகின்றது.

இன்றைய நிலவரம்

இன்றைய நிலவரம்

இதற்கிடையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையானது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. எனினும் இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத உச்சத்தினை தொட்ட நிலையில், அதில் இருந்து பார்க்கும்போது நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் தங்கம் விலையானது உச்சத்தில் இருந்து 10 கிராமுக்கு 9,000 ரூபாய் சரிவில் தான் காணப்படுகிறது. இதே வெள்ளியின் விலையானது உச்சத்தில் இருந்து கிலோவுக்கு 9,700 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

டெக்னிக்கல் வியூகம்
 

டெக்னிக்கல் வியூகம்

தங்கம் விலையானது டெக்னிக்கலாக பார்க்கும்போது இந்திய சந்தையில் அதிகரிக்கும் விதமாகவே பார்க்கப்படுகிறது. தினசரி கேண்டில் பேட்டார்னிலும் ஏற்றம் காணும் விதமாகவே பார்க்கப்படுகிறது. இதே போல் வெள்ளியின் விலையும் சற்று ஏற்றம் காணுவது போல் தான் காணப்படுகிறது. ஆக இது வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

வர்த்தகர்கள் கவனம்

வர்த்தகர்கள் கவனம்

இன்று ஃபெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் பேச உள்ளார். இதில் முக்கிய அறிவிப்புகள் வரலாமோ என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது. இதற்கிடையில் இன்று பேங்க் ஆப் இங்கிலாந்து வட்டி விகிதத்தில் மாற்றம் வரலாம் என்றும், இந்த டேட்டா வியாழக்கிழமையன்றும் வரவுள்ளது. ஆக இதனையும் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தலாம். அதோடு வேலை வாய்ப்பு குறித்தான அறிவிப்புகளும் வெள்ளிக்கிழமையன்று வரவுள்ளது. ஆக இதிலும் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தலாம்.

ஊக்கம் தரலாம்

ஊக்கம் தரலாம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பொருளாதார ஊக்கத் தொகைகள், பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கத்தினை கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்க டாலரின் மதிப்புக்கு ஊக்கத்தினை அளிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது வட்டியும் குறைவாக இந்த நேரத்தில், பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலையில் எதிரொலிக்கலாம்.

‘தள்ளுபடி அதிகரிப்பு

‘தள்ளுபடி அதிகரிப்பு

இந்தியாவினை பொறுத்தவரையில் தங்கத்தின் தேவையானது சற்று குறைந்துள்ள நிலையில் விற்பனைகள் குறைந்துள்ளது. இதனால் கடந்த வாரத்தில் பிசிகல் தங்கம் தள்ளுபடி விலையில் விற்கப்பட்டது. இது நடப்பு ஆண்டில் முதல் முறையாக இந்தளவுக்கு குறைந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்திகள் கூறுகின்றது. கடுமையான லாக்டவுன் நடவடிக்கைகள் தேவையை பாதித்த நிலையில், $2 பீரிமியத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம், கடந்த வாரத்தில் $2 தள்ளுபடியை வழங்கியுள்ளது.

வரி விகிதமும் குறைவு

வரி விகிதமும் குறைவு

இவற்றோடு கடந்த இந்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரியும் குறைக்கப்பட்டது. இதனால் வரி விகிதம் 10.75% ஆகவும், ஜிஎஸ்டி வரி 3% ஆகவும் குறைந்துள்ளது. ஆக இதுவும் தங்கத்திற்கு ஏதுவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிகரித்து வரும் பொருளாதார வளர்ச்சி குறித்தான நம்பிக்கைக்கு மத்தியில், வட்டி வீதம் குறைவாக இருப்பது, டாலருக்கு இன்னும் உந்துலாக இருக்கலாம். ஆக இது பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது கடந்த சில வாரங்களாகவே தடுமாற்றத்தில் காணப்பட்ட நிலையில், இன்று சற்று ஏற்றத்திலேயே காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 5.80 டாலர் அதிகரித்து, 1773.45 டாலர்களாக காணப்படுகிறது. அதோடு தங்கம் விலையானது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. தினசரி கேண்டில் பேட்டர்னிலும் இன்று சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கம் விலையினை போலவே வெள்ளி விலையும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலையானது 0.40% அதிகரித்து, 25.977 டாலர்களாக காணப்படுகிறது. வெள்ளியின் விலையும் முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் காணப்படுகிறது. எனினும் முந்தைய அமர்வின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 244 ரூபாய் அதிகரித்து, 46,995 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. அதோடு முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று கேப் அப் ஆகி மேலாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக தங்கம் விலையானது இன்று இன்னும் சற்று அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும், சர்வதேச சந்தையினை போலவே பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்படுகிறது. மே காண்டிராக்ட் மே 5 அன்று எக்ஸ்பெய்ரி ஆக உள்ள நிலையில், ஜூலை காண்டிராக்டில் வர்த்தகத்தினை செய்யலாம். இதில் தற்போது கிலோவுக்கு 309 ரூபாய் அதிகரித்து, 68,707 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக வெள்ளியின் விலையானது சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கத்தினை பொறுத்த வரையில் மீடியம் டெர்மிலும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. நீண்ட கால நோக்கில் வாங்கி வைக்கலாம். அதோடு பல காரணிகளும் தங்கத்திற்கு சாதகமாகவே உள்ளன. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. வெள்ளியின் விலையும் தொழிற்துறை வளர்ச்சிகள் மேம்பட்டு வரும் நிலையில், அதன் தேவை அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகிறது. ஆக வெள்ளியும் நீண்டகால நோக்கில் வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.