புதுச்சேரியில் கெத்து காட்டிய ரங்கசாமி…! ஆனால் ஒரு சிக்கல்!!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

புதுச்சேரியை பொறுத்தவரை ஆட்சி கலைக்கப்பட்டு அதன்பிறகு தேர்தல் நடைபெற்றது. கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்த நிலையில், அங்கு இறுதி கூட்டணி முடிவாகவே நாட்கள் ஆனது. அதனைத் தொடர்ந்து மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆா். காங்கிரஸ்-16, பாஜக-9, அதிமுக-5 தொகுதிகளில் போட்டியிட்டன.

எதிராக, காங்கிரஸ்-14, திமுக-13, மார்க்சிஸ்ட்-1, விசிக-1 தொகுதிகளிலும், ஏனாம் தொகுதியில் சுயேச்சைக்கு ஆதரவு அளித்தும் போட்டியிட்டன. தேமுதிக-26, நாம் தமிழா் கட்சி-28, மநீம-22, அமமுக-20 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கின.

இந்நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் 10, பாஜக 6, திமுக 6, காங்கிரஸ் 2 , சுயேச்சை 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் அதிமுக தோல்வியை தழுவியுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி தலைமையிலான ஆட்சி அமைய உள்ள நிலையில் முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

என்.ரங்கசாமி முதல்வராக பொறுப்பேற்பார் என்று கூறப்படும் நிலையில், நமச்சிவாயத்தை முதல்வராக்க முயற்சி நடைபெறும் என கூறப்படுகிறது. அதனால் இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுக்கும் என கருதப்படுகிறது.

newstm.in
 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.