முதலமைச்சராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த முக்கிய புள்ளிகள்.!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று முடிந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி 158 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 76 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் வரும் 7-ஆம் தேதி பதவியேற்க உள்ளார். முதலமைச்சராக பரவியேற்க உள்ள திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சந்தித்து பேசினார். காவல்துறை டி.ஜி.பி திரிபாதி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் சந்தித்து பேசினார்.  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.