முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின்; திமுக எம்.எல்.ஏக்களுக்கு முக்கிய அழைப்பு!

ஹைலைட்ஸ்:

திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் நாளை சென்னைக்கு வர அழைப்பு
ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் என்று துரைமுருகன் அறிவிப்பு
தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்
திமுக கூட்டணி
பெரும்பான்மை பெற்று 10 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சிக் கட்டிலில் அமரப் போகிறது. முதல்வராக
மு.க.ஸ்டாலின்
வரும் வெள்ளிக்கிழமை பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பெருந்தொற்று காரணமாக ராஜ்பவனில் எளிமையான முறையில் பதவியேற்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

சில தொகுதிகளில் இன்னும் முழுமையான முடிவுகள் வெளியாகாத நிலையில், இன்று நண்பகல் நிலவரப்படி
திமுக
கூட்டணி 159 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அடுத்ததாக திமுக எம்.எல்.ஏக்கள் ஒன்று கூடி சட்டமன்ற கட்சித் தலைவரை தேர்வு செய்வர். இவரே முதல்வராக பதவியேற்பார். பின்னர் பெரும்பான்மை கடிதத்தை ஆளுநரிடம் வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோருவர்.

C.Vijayabaskar: மீண்டும் மீண்டும் அதிமுகவிற்கு சிக்கல்; கடைசியில் வந்த ஹேப்பி நியூஸ்!

பின்னர் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார். இதையடுத்து ஆளுநரை சந்திக்கும் முதல்வர் தனது தலைமையில் பதவியேற்கப் போகும் அமைச்சரவை பட்டியலை வழங்குவார். அப்போது பதவியேற்கும் நேரம், நாள், இடம் உள்ளிட்டவை உறுதி செய்யப்படும். இதனைத் தொடர்ந்து முதல்வருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். பின்னர் முந்தைய அரசு கலைக்கப்பட்டதற்கான அறிவிப்பும், புதிய அரசு அமைந்ததற்கான அறிவிப்பும் பொதுத்துறை சார்பில் வெளியாகும்.

ஜெயலலிதாவுக்கு அப்புறம் ஸ்டாலின் தான்: நச்சுனு நங்கூரம் மாதிரி ட்வீட் போட்ட சித்தார்த்

இதையடுத்து தற்காலிக சபாநாயகர் நியமிக்கப்பட்டு அவருக்கு ஆளுநர் முன்னிலையில் பதவியேற்பு நிகழ்வு நடைபெறும். தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் வெற்றி பெற்ற 234 எம்.எல்.ஏக்களும் பதவியேற்பர். இந்நிலையில் சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நாளை (மே 4) மாலை 6 மணிக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக

திமுகவின் கோட்டையான சென்னை; மொத்தமாக வாஷ் அவுட் செய்து அசத்தல்!

அக்கட்சியின் பொதுச் செயலாளர்
துரைமுருகன்
அறிவித்துள்ளார். ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏக்களும் கலந்து கொள்ள வேண்டும். இதில் சட்டமன்ற குழு தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.