மு.க.ஸ்டாலினுக்கு மோடி, ராகுல் வாழ்த்து

புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள திமுக கூட்டணி ஆட்சியை பிடித்திருப்பதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நரேந்திர மோடி (பிரதமர்): சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மு.க.ஸ்டாலின், அறிவாலயத்துக்கு வாழ்த்துக்கள். தேச நலன், கொரோனா தொற்றை எதிர்கொள்வதிலும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்தவும் இணைந்து செயல்படுவோம். ராகுல் காந்தி (காங். முன்னாள் தலைவர்): தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்து உள்ளனர். உங்கள் தலைமையின் கீழ் மக்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வழிநடப்போம். வாழ்த்துகள்.ராஜ்நாத் சிங் (பாதுகாப்பு துறை அமைச்சர்): தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்.நிர்மலா சீதாராமன் (மத்திய நிதி அமைச்சர்): தமிழக தேர்தலில் வெற்றிபெற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். ஸ்டாலின், திமுக.வுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.சரத்பவார் (தேசியவாத காங். தலைவர்): உங்களுடைய வெற்றிக்கு வாழ்த்துகள். உண்மையிலேயே தகுதியான வெற்றி. உங்கள் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு, சிறந்த முறையில் சேவையாற்ற வாழ்த்துகிறேன்.தேஜஸ்வி யாதவ் (பீகார் முன்னாள் துணை முதல்வர்): இந்த மகத்தான வெற்றிக்காக தங்களை அர்ப்பணித்து கொண்ட திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்களுக்கும் வாழ்த்துக்கள். உங்களின் சிறப்பான தலைமையின் கீழ் மக்கள் நலன் சார்ந்த கொள்கைகள் வளர்ச்சி பெறும் என்று ஆர்வத்துடன் மக்கள் காத்திருக்கின்றனர்.அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி முதல்வர்): தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் பல. தமிழக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வெற்றிகரமாக ஆட்சி நடத்த வாழ்த்துக்கள்.தேவகவுடா (முன்னாள் பிரதமர்): திமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வந்ததற்காக எனது நண்பரும், உங்களது தந்தையுமான கருணாநிதி தங்கள் மீது மதிப்பும், மகிழ்ச்சியும் கொள்வார். திராவிட கொள்கை மற்றும் பாரம்பரியத்தை இன்னும் சிறப்பான உயரத்துக்கு எடுத்து சென்று தமிழக மக்களுக்கு முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.  குமாரசாமி (கர்நாடகா முன்னாள் முதல்வர்): 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைத்து மக்கள் சேவையில் ஈடுபட இருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.  அகிலேஷ் யாதவ் (உ.பி. முன்னாள் முதல்வர்): தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சிறப்பான வெற்றி பெற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்.இது தவிர இன்னும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், தொழில் நிறுவனர்கள் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.