லேசான கொரோனா அறிகுறி உள்ளவர்கள் சிடி-ஸ்கேன் எடுக்கலாமா?

கொரோனா வைரஸ் ஒரு நபரை தாக்கியதும், அவரது நுரையீரலைத்தான் அதிகமாக பாதிக்கும். இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிர் இழக்க நேரிடும். இதனால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபருக்கு, சிடி-ஸ்கேன் எடுக்கப்பட்டு நுரையீரல் மற்றும் உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்பட சிகிச்சை அளிக்கப்படும்.
தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. இதனால் தினந்தோறும் ஏராளமான நோயாளிகள் வருவதால் மருத்துவமனைகளில் நிரம்பியுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
அறிகுறியில்லாத கொரோனா வைரஸ் தாக்குதல், லேசான அறிகுறிகளுடன் உள்ளவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நோயாளிகளும் உள் உறுப்புகளில் பாதிப்பு உள்ளதா? என்பதை அறிந்து கொள்ள சிடி-ஸ்கேனை அதிக அளவில் நாடுகின்றனர். பொதுவாக சிடி-ஸ்கேன் உள் உறுப்புகளை தெள்ளத்தெளிவாக படம் பிடிக்கும் என்பதால் பொதுமக்களும் அதற்கு பயப்படுவதில்லை.
எய்ம்ஸ் டைரக்டர் ரன்தீப்
இந்த நிலையில் சிடி-ஸ்கேன் மிகவும் ஆபத்தானது என்று எய்ம்ஸ் டைரக்டர் டாக்டர் ரன்தீப் குலேரியாக எச்சரித்துள்ளார்.
சிடி-ஸ்கேன் குறித்து டாக்டர் ரன்தீப் குலேரியா கூறுகையில் ‘‘சிடி-ஸ்கேன் மற்றம் பயோமேக்கர்ஸ் ஆகியவை தவறாக பயன்படுத்தப்படுகிறது. உங்களுக்கு லேசான அறிகுறி இருக்கும் என்றால், சிடி-ஸ்கேன் செய்வதால் எந்த லாபமும் இல்லை. ஒருமுறை நீங்கள் சிடி-ஸ்கேன் எடுத்தால் அது 300 மார்பக-எக்ஸ்ரேவிற்கு சமமானது. இது அதிக விளைவுகளை ஏற்படுத்தும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.