விரைவில் அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எம்32.!

சாம்சங் நிறுவனம் விரைவில் தனது புதிய கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன. குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப வசதி மற்றும் தனித்துவமான கேமரா அம்சங்களுடன் இந்த கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த சாதனத்தின் சில அம்சங்களை இப்போது பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்32

சாம்சங் கேலக்ஸி எம்32

சாம்சங் கேலக்ஸி எம்32 மாடல் ஆனது 6.4-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பை அடிப்படையாக கொண்டு வெளிவரும். பின்பு

1080 பிக்சல் தீர்மானம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எம்32

மாடல்.

சாம்சங் கேலக்ஸி எம்32 மாடல்

சாம்சங் கேலக்ஸி எம்32 மாடல் ஆனது ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனத்தின் மாடல் SM-M325FV என்று சாம்சங்

நிறுவனம் கூறியுள்ளது.

வைரல் வீடியோ: ATM அறையிலிருந்து 'அதை' ஏன்யா திருடான? ரொம்ப சீப்பான திருட்டு.. ஆனா மற்றவருக்கு ஆபத்து.வைரல் வீடியோ: ATM அறையிலிருந்து ‘அதை’ ஏன்யா திருடான? ரொம்ப சீப்பான திருட்டு.. ஆனா மற்றவருக்கு ஆபத்து.

சாம்சங் கேலக்ஸி எம்32

சாம்சங் கேலக்ஸி எம்32 மாடலில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும். குறிப்பாக 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் வெளிவரும் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி எம்42 5G சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 Samsung Galaxy M42 5G சிறப்பம்சம்

Samsung Galaxy M42 5G சிறப்பம்சம்

இது இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனருக்கான ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது அதிகபட்சமாக 2.2GHz வேகத்தைக் கொண்டுள்ளது. இந்த சிப்செட்6ஜிபி ரேம் / 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1TB வரை ஸ்டோரேஜ்ஜை விரிவாக்கக்கூடிய வசதியும் உள்ளது. இந்தசாதனம் குவாட் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

கேமரா மற்றும் இணைப்பு அம்சங்கள்

கேமரா மற்றும் இணைப்பு அம்சங்கள்

இது 48 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி கேமரா சென்சார் உடன், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார், 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் உடன் முன்பக்கத்தில் 20 மெகாபிக்சல்கள் கொண்ட செல்பி கேமராவை கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எம் 42 5 ஜி ஸ்மார்ட்போன் 15W அதிகபட்ச சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் 5000 எம்ஏஎச் பேட்டரியை

ஆதரிக்கிறது. இது UI 3.1 உடன் Android 11 இல் இயங்கும் இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. 5G SA / NSA, இரட்டை 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), புளூடூத் 5, GPS + GLONASS, USB Type-C மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் போன்ற

அம்சங்களும் உள்ளது.

கூகுள் பிக்சல் 4ஏ சாதனத்தை குறைந்த விலையில் வாங்க சரியான நேரம்.!கூகுள் பிக்சல் 4ஏ சாதனத்தை குறைந்த விலையில் வாங்க சரியான நேரம்.!

சாம்சங் கேலக்ஸி எம் 42 5 ஜி ஸ்மார்ட்போனின் விலை

சாம்சங் கேலக்ஸி எம் 42 5 ஜி ஸ்மார்ட்போனின் விலை

சாம்சங் கேலக்ஸி எம் 42 5 ஜி ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் மிட் ரேஞ் செக்மென்ட்டில் தான் இருக்கும் என்று நிறுவனம் முன்பே கூறியிருந்தது. அதேபோல், Samsung Galaxy M42 5G போனின் 6ஜிபி ரேம் வேரியண்ட் மாடல் இப்போது ரூ .21,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் 8ஜிபி ரேம் வேரியண்ட் மாடல் இப்போது இந்தியாவில் வெறும் ரூ. 23,999 என்ற விலையில் வாங்குவதற்குக் கிடைக்கிறது. இது ப்ரிஸம் டாட் பிளாக், பிரிசம் டாட் கிரே மற்றும் ப்ரிஸம் டாட் ஒயிட் ஆகிய வண்ண விருப்பங்களில் வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.