அதிரடியாக விலை குறைக்கப்பட Oppo A53 (2020).. கூடுதல் சலுகையும் கிடைச்சா வேண்டான்னு சொல்லுவோமா?

ஒப்போ ஏ 53 2020 (Oppo A53 2020) ஸ்மார்ட்போன் சாதனம் கடந்த ஆண்டு 2020ல் ஆகஸ்ட் மாதத்தில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஒப்போ ஏ 53 (2020) வேரியண்ட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு நிறுவனம் இப்போது அதிரடியாக விலை குறைப்பை அறிவித்துள்ளது. Oppo A53 (2020) ஸ்மார்ட்போனின் இரு வேரியண்ட் வகைகளுக்கும் இப்போது இந்தியாவில் ரூ. 2000 விலைக் குறைப்பு கிடைக்கிறது. இத்துடன் கிடைக்கும் கூடுதல் சலுகைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Oppo A53 (2020) ஸ்மார்ட்போன் மீது அதிரடி விலை குறைப்பு

Oppo A53 (2020) ஸ்மார்ட்போன் மீது அதிரடி விலை குறைப்பு

ஒப்போ நிறுவனம் அறிவித்துள்ள படி, இந்த Oppo A53 (2020) ஸ்மார்ட்போனின் இரண்டு வேரியண்ட் வகைகளும் இப்போது திருத்தப்பட்ட விலைகளுடன் பிளிப்கார்ட்டில் வாங்கக் கிடைக்கின்றது. முன்னர், ரூ. 12,990 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட 6 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் மாடல் இப்போது வெறும் ரூ. 10,990 விலைக்கு வாங்க கிடைக்கிறது. அதேபோல், ரூ. 15,490 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் மாடல் இப்போது வெறும் ரூ. 12,990 விலையில் வாங்கக் கிடைக்கிறது.

ரூ. 2000 விலை குறைப்பு

ரூ. 2000 விலை குறைப்பு

அடிப்படையில், இந்த ஸ்மார்ட்போனின் இரண்டு வேரியண்ட் மாடல்கள் மீதும் ரூ. 2000 விலை குறைப்பை இப்போது நீங்கள் பெற முடியும். இந்த விலைக் குறைப்பு நிரந்தரமானது என்பதை ஒப்போ நிறுவனம் உறுதிப்படத் தெரிவித்துள்ளது. மேலும், ஆன்லைன் போரட்டல்களில் நிகழும் சிறப்பு விற்பனை நிகழ்வுகளின் போது இதன் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Oppo A53 (2020) சாதனம் கூடுதல் சலுகைகளைப் பெறக்கூடும் என்பதையும் நிறுவனம் தெளிவாகக் கூறியுள்ளது.

மாடி வீட்டு மக்களே ஏசி இன்னும் வாங்கலையா? அப்ப இனிமேல் வாங்க வேண்டாம்.! வந்துவிட்டது புதிய கண்டுபிடிப்பு.!மாடி வீட்டு மக்களே ஏசி இன்னும் வாங்கலையா? அப்ப இனிமேல் வாங்க வேண்டாம்.! வந்துவிட்டது புதிய கண்டுபிடிப்பு.!

ஒப்போ A53 (2020) ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

ஒப்போ A53 (2020) ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

சிறப்பு விற்பனைக்கு ஏற்றார் போல் ஒவ்வொரு முறையும் கூடுதல் சலுகையில் விலை மாறக்கூடம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஒப்போ A53 (2020) ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் மற்றும் முழு விவரக்குறிப்பு பற்றி இப்போது பார்க்கலாம். இந்த சாதனம் 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே உடன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 1600 x 720 பிக்சல்கள் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 செயலி மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

கூடுதல் ஸ்டோரேஜ், பெரிய பேட்டரி

கூடுதல் ஸ்டோரேஜ், பெரிய பேட்டரி

இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் விரிவாக்கம் செய்யவும் உங்களுக்கு அனுமதி கிடைக்கிறது. ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார் உள்ளது. கேமராவை பொறுத்த வரையில், ஒப்போ ஏ 53 இல் 13 மெகாபிக்சல் மெயின் ஷூட்டர், 2 மெகாபிக்சல் மேக்ரோ கேம் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமராவும், வழங்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 10 இல் கலர்ஓஎஸ் 7.2 உடன் இயங்குகிறது. 5,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் 18W பாஸ்ட் சார்ஜிங்கைக் கொண்டுள்ளது. இணைப்பு அம்சங்களை பொறுத்த வரையில் இது 4 ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ் / க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்ற இதர அம்சங்களுடன் வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.