அப்பதான் அப்பாவின் வாயில் தண்ணீர் ஊற்றினார்.. அதுக்குள்ளேயே.. புரண்டு புரண்டு கதறி அழுத மகள்..!

அப்பதான் அப்பாவின் வாயில் தண்ணீர் ஊற்றினார்.. அதுக்குள்ளேயே.. புரண்டு புரண்டு கதறி அழுத மகள்..!

|

ஸ்ரீகாகுளம்: கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஊரின் ஒதுக்குப்புறத்தில் தனித்துவிடப்பட்டார் ஒரு கூலி தொழிலாளி.. இறுதியில் தன் மனைவி, மகள் கண்ணெதிரிலேயே துடிதுடித்து உயிரிழந்த சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முறை கொரோனா படுவீரியமாக பரவி வருகிறது.. ஆஸ்பத்திரிகள் முதல் சுடுகாடுகள் வரை நிறைந்து வழிகின்றன.. தடுப்பூசிகள் முதல் ஆக்ஸிஜன் வரை தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

இதனால் தொற்று பாதிப்புகளும், உயிரிழப்புகளும் பெருகி வருகின்றன. இதேசமயம், தொற்றால் இறந்தவர்களை தொட்டு அழக்கூடிய முடியாத நிலையில் உறவுகள் துடிதுடிக்கின்றன. அந்த வகையில், ஆந்திராவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

சேலத்தில் நிரம்பிய கொரோனா வார்டு.. கைமீறி செல்லும் நிலைமை.. தவிக்கும் நோயாளிகள்.. புது சிக்கல்

அறிகுறி

அறிகுறி

ஸ்ரீகாகுளம் மாவட்டம் ஜிசிகிதம் மடலம் கோயனப்பெட்டா கிராமத்தை சேர்ந்தவர் ஆசிரி நாயுடு… விஜயவாடாவில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.. இந்நிலையில், ஆசிரி நாயுடுவுக்கு திடீரென கொரோனாவுக்கான அறிகுறிகள் தெரியவும் டெஸ்ட் எடுத்துள்ளார். அப்போது தொற்று உறுதி செய்யப்பட்டது.

சிகிச்சை

சிகிச்சை

இதையடுத்து, குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இந்த விஷயம் தெரியவந்தது. பிறகு, ஆசிரி நாயுடு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றார்…ஆனால், ஊருக்குள் அவரை யாருமே சேர்க்கவில்லை.. ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் அவர்களை தங்குமாறு கிராமத்தினர் சொன்னார்கள்.. அதன்படியே, ஊருக்கு வெகுதூரத்தில் ஒரு குடிசை போட்டு தங்கினர்.. அங்கு எந்த வசதியும் அவர்களுக்கு இல்லை..

 சிகிச்சை

சிகிச்சை

உரிய சிகிச்சையும் தர முடியாததால், ஆசிரி நாயுடு உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது. மூச்சுவிடவே சிரமப்பட்டார்.. குடிசைக்கு வெளியே, திணறி திணறி தரையில் விழுந்து துடிப்பதை பார்த்து, அவரது மகள் பதறி போனார்.. வீட்டிற்குள்ளிருந்து அப்பாவுக்கு தண்ணீரை கொண்டு வந்து வாயில் ஊற்றினார்..

வீடியோ

ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே ஆசிரி நாயுடுவின் உயிர் பரிதாபமாக போய்விட்டது.. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி உள்ளது.. இறந்துபோன அப்பாவை தொட்டு அழுவதற்காக மகள் முயலும்போது, அவரை தாய் தொடவிடாமல் தடுத்து நிறுத்தி அழுதது காண்போரை நிலைகுலைய வைத்து வருகிறது..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.