அமைச்சரவையில் இடம் உண்டா? உதயநிதி ஸ்டாலின் அளித்த பதில் !!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாக பரபரப்பை தனித்துள்ளது. திமுக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கிறது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அடுத்த முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இதனால் அக்கட்சி தொண்டர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். 

இதனிடையே, திமுக ஆட்சியில் அமைச்சரவையில் இடம்பிடிப்பது யார் யார் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. மு.க. ஸ்டாலின் கொடைக்கானலுக்கு ஓய்வுக்கு சென்றப்போது அந்த பணிகளை முடித்துவிட்டதாகவும், எனவே இனி புதிதாக அமைச்சர்களை தேர்வு செய்ய ஆலோசனை நடத்தவேண்டியது இல்லை எனவும் கூறப்படுகிறது. 

இந்த சூழலில், திமுக இளைஞரணி செயலாளரும் மு.க. ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. அவரது ஆதரவாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என ஒரு தரப்பினரும் தற்போதைக்கு அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாது என மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றிப்பெற்ற பின்னர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், இது தலைவருக்கான வெற்றி, கலைஞருக்கான வெற்றி. தொகுதி மக்கள் நிறைய கோரிக்கை கொடுத்திருக்கிறார்கள். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்றார். 

அமைச்சரவையில் உங்களுக்கு இடம் கிடைக்குமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு , மே 7ஆம் தேதி தெரிந்துவிடும் என்று உதயநிதி ஸ்டாலின் சிரித்தப்படி பதிலளித்து சென்றார்.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.