அம்மா உணவகத்தை சூறையாடிய திமுகவினர்! அதிரடி உத்தரவிட்ட ஸ்டாலின்!

”அம்மா உணவகத்திற்குள் புகுந்து பெயர் பலகையை எடுத்த இரண்டு கழகத் தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை முகப்பேர் 10-வது பிளாக்கில் உள்ள அம்மா உணவகத்திற்குள் இன்று காலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் புகுந்து அங்கிருந்த அம்மா உணவக பெயர் பலகைகள், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்கள் உள்ளிட்டவற்றை கிழித்து வீதியில் எறிந்தனர். அத்துடன் உணவகத்தில் இருந்து உணவுப் பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இதனைக்கண்டு, அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பெண் ஊழியர்கள் வெளியே ஓடி வந்தனர்.தகவல் அறிந்து ஜெஜெ நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை கண்டிக்கும் விதமாக அம்மா உணவகத்தின் பெயர் பலகையை எடுத்தவர்கள் மீது மு.க ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதனை, தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ ”மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழகத் தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும்,அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார்” என்று பதிவிட்டுள்ளார்.

மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும்,அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார்… pic.twitter.com/8FjmbSzTgS
— Subramanian.Ma (@Subramanian_ma) May 4, 2021

மு.க ஸ்டாலினின் இந்த நடவடிக்கைக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவரின், இந்தப் பதிவை இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்து பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.