ஆசைக்கு இணங்க மறுத்த பிரேமா.. காதலன் மீது விழுந்த பழி.. கப்சிப் கலியமூர்த்தி.. பகீர் சம்பவம்

ஆசைக்கு இணங்க மறுத்த பிரேமா.. காதலன் மீது விழுந்த பழி.. கப்சிப் கலியமூர்த்தி.. பகீர் சம்பவம்

|

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனது ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண்ணை உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்

இளம்பெண் பிரேமாவின் படுகொலையில் அவரது காதலனுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற அடிப்படையில் போலீஸ் விசாரணை நடத்தினர். ஆனால் பிரேமாவின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து வந்தவர் இந்த பாதகத்தை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சங்கரன்கோவில்: 30 ஆண்டுகால அ.தி.மு.க. கோட்டையை தகர்த்த தி.மு.க.. அ.தி.மு.க தோல்விக்கு காரணம் இதுதான்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எடைக்கல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆசனூர் காட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயதான இளம்பெண் பிரேமா. ஏப்ரல் 28ஆம் தேதி காலை வீட்டின் அருகே உள்ள தோட்டத்திற்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

மருத்துவமனையில் சிகிச்சை

மருத்துவமனையில் சிகிச்சை

அவரை தேடி அவரது தாய் தோட்டத்திற்கு சென்றபோது அங்கு தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார் மீட்கப்பட்ட பிரேமாவை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

காதலன் மீது பழி

காதலன் மீது பழி

ஆனால் சிகிச்சை பலனின்றி அன்றிரவே உயிரிழந்தார். இது தொடர்பாக எடைக்கல் காவல் நிலையத்தில் இறந்தவரின் தம்பி பிரபாகரன் அளித்த புகாரில் போலீஸ் விசாரணை நடத்தி வந்தனர் முதல்கட்ட விசாரணையில் சின்ன சேலத்தை அடுத்த அம்மையகரம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலா என்பவர் பிரேமாவை காதலித்து வந்தது தெரிய வந்தது.

ஒப்புக்கொண்டார்

ஒப்புக்கொண்டார்

அவரைப் பிடித்து விசாரித்தபோது அவருக்கும் இந்தக் கொலைக்கும் எந்த தொடர்பு இல்லை என தெரியவந்தது. பாலாவிடம் பிரேமா கடைசியாக பேசிய செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர் அதில் தந்தை நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிர் செய்துவரும் 48 வயதான கலியமூர்த்தி என்பவர்ருடையது என தெரியவந்தது கலியமூர்த்தியின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது அந்த எண்ணில் இருந்து தான் பிரேமா பலமுறை தன் காதலுடன் பேசி உள்ளார் என்பது தெரியவந்தது சந்தேகத்தின் பேரில் கலியமூர்த்தி போலீசார் தீவிரமாக விசாரித்தபோது தான் பிரேமாவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்

கொலை செய்த கலியமூர்த்தி

கொலை செய்த கலியமூர்த்தி

பிரேமாவிடம் செல்போன் இல்லாததால் காதலனுடன் பேச அடிக்கடி கலியமூர்த்தி செல்போனை வாங்கிக் கொள்வார். அந்த உதவியை பயன்படுத்தி இளம்பெண்ணிடம் கலியமூர்த்தி பலமுறை அத்துமீறி முயன்றுள்ளார். ஏப்ரல் 28ஆம் தேதி அன்று பிரேமாவை பாலியல் பலாத்காரம் செய்ய கலியமூர்த்தி முயன்ற போது பிரேமா மறுத்து தப்பி ஓட முயன்ற உள்ளார்,அப்போது அருகில் கிடந்த உருட்டு கட்டையால் அவரை பலமுறை அடித்து கொலை செய்திருக்கிறார் கலியமூர்த்தி. போலீசாரிடம் வாக்குமூலத்தில் தெரிவித்தார். இதையடுத்து அவரை தி கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.