இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,57,229 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு; 3,449 பேர் கொரோனாவுக்கு பலி

நாட்டில் புதிதாக கொரோனா தொற்று பாதித்தோரின் தினசரி எண்ணிக்கை 3 ஆவது நாளாக குறைந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 229 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே போன்று இறப்பு எண்ணிக்கையும் 3 ஆயிரத்து 449 ஆக குறைந்திருக்கிறது.

நோய் தொற்றில் இருந்து குணமாகி 3 லட்சத்து 20 ஆயிரத்து 289 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சுமார் முப்பத்து நான்கரை லட்சம் பேர் தொற்று பாதித்து சிகிச்சையில் உள்ளனர்.

இந்த எண்ணிக்கைகளையும் சேர்த்து மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 3 லட்சத்தை நெருங்கியது. இறப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்து 22 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதுவரை 15 கோடியே 89லட்சத்து 32 ஆயிரத்து 921 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.