இலங்கை பார்லி., யில் விவாதம் ஒத்திவைப்பு

கொழும்பு:இலங்கையில் கொழும்பு துறைமுக நகரை சீனா உருவாக்கி வருகிறது. சீனாவின் நிதி உதவியுடன் இந்த துறைமுக நகரம் உருவாக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகரை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க சீனா ஆசைப்படுகிறது. இதற்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.இது தொடர்பாக இலங்கை உச்ச நீதி மன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்க இருந்தது. இதையடுத்து இந்த மசோதா மீது இலங்கை பார்லி. யில் இன்று விவாதம் நடக்க இருந்தது.உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகததால், மசோதா மீதான விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, பார்லி., பொதுச் செயலர் தம்மிகா தசநாயக தெரிவித்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.