எதிர்க்கட்சி தலைவர் யார்? அதிமுகவில் அடுத்த பூகம்பம்!

ஹைலைட்ஸ்:

எதிர்க்கட்சி தலைவர் யார்?
அதிமுக கூட்டத்தை எதிர்நோக்கும் ஆதரவாளர்கள்

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்து திமுக ஆட்சி உறுதியாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி
முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். ஏற்கெனவே
அதிமுக
கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என சர்ச்சை எழுந்தது. பல குழப்பங்களுக்கு பின் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

தற்போது அதிமுக எதிர்க்கட்சியாக மாறியுள்ள நிலையில்
எதிர்க்கட்சி தலைவர்
யார் என மற்றொரு பிரச்சினை உருவாகியுள்ளது. அதிமுக 66 சீட்டுகளில் வெற்றிபெற்றுள்ளது. வெற்றிபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்களுடன் மே 7ஆம் தேதி கூட்டம் நடைபெறவுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

இக்கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏக்களும் கட்டாயமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே தேதியில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

திமுக சட்டமன்றக்குழு தலைவராக ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு!

எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபின் சேலத்தில் உள்ள அவரது வீட்டில் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பண்ணன், அன்பழகன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர். அப்போது, மே 7 கூட்டத்தின் அஜெண்டா பற்றி ஆலோசித்துள்ளனர்.

மே 7 கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது பற்றி முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவில் நீடிக்கும் இரட்டைத் தலைமையால் பல்வேறு பிரச்சினைகள் எழுவதாக ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கமான வட்டாரத்தில் கூறுகின்றனர்.

ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே எதிர்க்கட்சி தலைவராக வேண்டுமென விரும்புகின்றனர்.
ஓபிஎஸ்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்பதால் அவர் எதிர்க்கட்சி தலைவராக வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஈபிஎஸ் முதல்வர் வேட்பாளர் என்பதால் அவர் எதிர்க்கட்சி தலைவராக வேண்டுமென அவரது வேட்பாளர்கள் கூறுகின்றனர்.

மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்!

இதுமட்டுமல்லாமல், கொங்கு மண்டலத்தில் அதிமுக 38 தொகுதிகளை கைப்பற்றியதற்கு ஈபிஎஸ் காரணம் எனவும் வாதிடுகின்றனர். எடப்பாடி தொகுதியிலேயே பழனிசாமி கிட்டத்தட்ட 94,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். ஓபிஎஸ் சுமார் 11,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

தெற்கில் அதிமுக வெறும் 18 தொகுதிகளை மற்றுமே கைப்பற்றியுள்ளது. அதிக தொகுதிகளில் வெற்றிபெற ஈபிஎஸ் காரணம் என்பதால் அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்க வேண்டுமெனவும் அவரின் ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.

ஏற்கெனவே முதல்வர் வேட்பாளர் விவகாரம் அதிமுகவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதில் மற்றொரு பிரச்சினை வெடிக்கும் என்கின்றனர் அதிமுக வட்டாரத்தில்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.