ஒரே ரீசார்ஜ்; 84 நாட்களுக்கு UNLIMITED டேட்டா; ஆஹா BSNL-ல இப்படி ஒரு Plan-ஆ!

ஹைலைட்ஸ்:

Bபோட்டியே இல்லாத SNL-இன் டேட்டா ரீசார்ஜ் திட்டங்கள்
ஒன்று ட்ரூலி அன்லிமிடெட் டேட்டா; 84 நாட்கள் வேலிடிட்டி.
மற்றொன்று 5ஜிபி டெய்லி டேட்டா; 90 நாட்கள் வேலிடிட்டி.

பிஎஸ்என்எல்
என்று நன்கு அறியப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் அதன் 4ஜி ப்ரீபெய்ட் திட்டங்களை ட்ரூலி அன்லிமிடெட் டேட்டா நன்மையுடன் வழங்கி வருகிறது.

உங்க BSNL மொபைல் நம்பரை கண்டுபிடிக்க ஒரு USSD Code இருக்கு! அது தெரியுமா?

இங்கே ‘ட்ரூலி அன்லிமிடெட்’ என்றால் குறிப்பிட்ட திட்டத்தால் வழங்கப்படும் டேட்டா நன்மையில் FUP வரம்பு இருக்காது என்று அர்த்தம். எனவே திட்டத்தின் காலாவதி தேதி நெருங்காத வரை பயனர்கள் தாங்கள் “உட்கொள்ளும்” டேட்டாவின் அளவு குறித்து கவலைப்பட தேவையில்லை.

இவ்ளோ கம்மி விலைக்கு 365 நாட்கள் Validity-ஆ? Jio-கிட்ட கூட இல்லையே; மிரட்டும் BSNL!

ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், அல்லது வோடபோன் ஐடியா (வி) உள்ளிட்ட இந்தியாவின் வேறு எந்த தொலைத் தொடர்பு ஆபரேட்டரும் கூட இத்தகைய நன்மையுடன் வரும் திட்டத்தை வழங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

சரி வாருங்கள் ட்ரூலி அன்லிமிடெட் டேட்டா நன்மையுடன் வரும் பிஎஸ்என்எல் 4 ஜி ப்ரீபெய்ட் திட்டத்தைப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் 4ஜி ‘எஸ்.டி.வி 1098’ ப்ரீபெய்ட் திட்டம்:

இது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஒரு ட்ரூலி அன்லிமிடெட் டேட்டா ப்ரீபெய்ட் திட்டமாகும். இது நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிராந்தியங்களில் உள்ள 4ஜி சேவை சந்தாதாரர்களுக்கு அணுக கிடைக்கும் 4ஜி ப்ரீபெய்ட் திட்டமாகும்.

இந்த திட்டத்துடன் வழங்கப்படும் டேட்டா நன்மைக்கு எந்த வேக கட்டுப்பாடும் கிடையாது.

ட்ரூலி அன்லிமிடெட் டேட்டாவை தவிர்த்து இந்த ‘எஸ்.டி.வி 1098’ ஆனது வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ்களையும் வழங்குகிறது.

மேலும் இந்த திட்டத்தின் பயனர்களுக்கு வரம்பற்ற பாடல் மாற்றும் திறனுடன் கூடிய இலவச ட்யூன்களும் அணுக கிடைக்கும். இந்த திட்டத்தின் விலை ரூ.1,098 ஆகும் மற்றும் இதன் செல்லுபடியாகும் காலம் 84 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் 4ஜி ‘எஸ்.டி.வி 1098’ ப்ரீபெய்ட் திட்டம் வழங்கும் நன்மைகளுடன் பொருந்தக்கூடிய வேறு எந்த திட்டமும் தற்போது இந்தியாவில் இல்லை.

இப்படியாக பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் தரமான 4ஜி டேட்டா திட்டம் இது மட்டும் அல்ல, இன்னொரு திட்டமும் உள்ளது.

பிஎஸ்என்எல் 4ஜி ‘எஸ்.டி.வி .599’ திட்டம்:

பி.எஸ்.என்.எல்-இன் மற்றொரு 4ஜி திட்டம் ‘எஸ்.டி.வி .599’ ஆகும், இதன் விலை ரூ.599 ஆகும். இது அதன் பயனர்களுக்கு தினமும் 5 ஜிபி அளவிலான எஃப்யூபி டேட்டாவை 90 நாட்களுக்கு வழங்குகிறது.

தவிர வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளும் அணுக கிடைக்கும். குறிப்பிட்ட தினசரி டேட்டா அளவு நுகரப்பட்டவுடன் இணைய வேகம் 80 Kbps ஆக குறைக்கப்படும்.

இந்த திட்டம் STV1098 உடன் போட்டியிடலாம், ஏனெனில் இது நிறைய அளவிலான டேட்டாவையும் வழங்குகிறது, தவிர 90 நாட்கள் என்கிற கூடுதல் செல்லுபடியாகும் காலத்தையும் வழங்குகிறது.

பிஎஸ்என்எல்லிலிருந்து ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் இந்த 5 ஜிபி டெய்லி டேட்டா திட்டத்திற்கு அருகில் எந்த ஆபரேட்டர்களின் திட்டமும் அமரவில்லை.

பிஎஸ்என்எல் 4ஜி ப்ரீபெய்ட் திட்டங்களின் குறைபாடுகள்:

பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4 ஜி சேவைகளை வழங்காததால், மேற்குறிப்பிட்ட பிஎஸ்என்எல் 4ஜி திட்டங்கள் ஆனது நிறுவனத்தின் நேரடி மற்றும் நல்ல நெட்வொர்க் கவரேஜை வழங்கும் பிராந்தியத்தில் இருக்கும் பயனர்களுக்கு மட்டுமே மதிப்புமிக்கயாக இருக்கும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை இல்லாத பகுதிகளுக்கு அதிகம் பயணிக்கும் பயனர்களுக்கு, ட்ரூலி அன்லிமிடெட் டேட்டா திட்டம் என்பது ஒரு மோசமான தேர்வாக இருக்கும்

பி.எஸ்.என்.எல் நிறுவனம் இந்தியாவில் தனது 4 ஜி நெட்வொர்க்குகளை முடிந்தவரை விரைவாக உருவாக்கும் திட்டத்தில் உள்ளது. டெலிகாமின் 4 ஜி வோல்டிஇ சேவைகள் தற்போது கோயம்புத்தூர் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய இந்தியாவின் சில பகுதிகளில் நேரலையில் உள்ளன.

2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பிஎஸ்என்எல் தனது 4 ஜி நெட்வொர்க்கை உருவாக்கி முடிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த காலவரையறை எந்த தாமதங்களும் இல்லாத பட்சத்தில் மட்டுமே நடக்கும். இல்லையெனில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை குறைந்தது 2023 வரை காண முடியாது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.