கொரோனாவுக்கு எதிராக போராட இந்தியாவுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கியது இத்தாலி..!

கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்காக இந்தியாவுக்கு மருத்துவ உதவிகளை இத்தாலி வழங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து இந்தியாவுக்கு பல்வேறு நாடுகளும் மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றன.

இந்த வரிசையில் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் 20 வென்டிலேட்டர்களை இத்தாலி வழங்கியுள்ளது. வென்டிலேட்டர்களை ஏற்றிக் கொண்டு வந்த விமானம் டெல்லியில் தரையிறங்கியது. இத்தாலியின் உதவிக்கு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி நன்றி தெரிவித்துள்ளார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.