சிம்புவிற்கு மிகப்பெரிய இடம் காத்திருக்கிறது… ஒய்.ஜி.மகேந்திரன் கருத்து !

|

சென்னை : மாநாடு திரைப்படம் சிம்புவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் அவருக்கு மிகப்பெரிய இடம் காத்திருக்கிறது என ஒய்ஜி மகேந்திரன் கூறியுள்ளார்.

மூத்த நடிகரும், நாடக்கலைஞருமான ஒய்ஜி மகேந்திரன் மாநாடு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அப்படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து ஒய். ஜி மகேந்திரன் பகிர்ந்து கொண்டார்.

சவால் நிறைந்தது

நடிகர் திகலம் சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என 3 ஜாம்பவான்களுடன் நடித்த மூத்த நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், இவர் தற்போது மாநாடு திரைப்படத்தில் சவால் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

பெரிய அளவில் ஈர்க்க்கும்

பெரிய அளவில் ஈர்க்க்கும்

மாநாடு திரைப்படத்தில் படத்தில் எனது கதாபாத்திரம் முக்கியமானதாக இருக்கும் ஆனால், அதன் விவரங்களை என்னால் வெளியிட முடியாது. இயக்குனர் வெங்கட் பிரபுவின் தனித்துவமான கதை மாநாடு திரைப்படத்திற்கு பெரிய ஈர்ப்பாக அமைந்துள்ளது என்றார்.

திருப்புனையாக அமையும்

திருப்புனையாக அமையும்

சிலம்பரசனை நான் சிறு வயதில் இருந்தே பார்த்து வருகிறேன். அவருடன் இதற்கு முன் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் நடித்திருக்கிறேன். சிம்புவிற்கு மாநாடு திரைப்படம் மிகப்பெரிய திருப்புமனையாக இருக்கும். அவர் தொடர்ந்து சரியான கதைகளைத் தேர்வு செய்து நடித்தால் அவருக்காக ஒரு பெரிய இடம் காத்திருக்கிறது என்று நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் கூறியுள்ளார்.

முக்கிய வேடத்தில்

முக்கிய வேடத்தில்

சுரேஷ் காமாட்சி தயாரித்து, வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார், ரிச்சர்ட் எம் நாதன் கேமராவை இயக்குகிறார்.கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ், கருணாகரன் ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.