சில வரி செய்திகள்| Dinamalar

டைனோசர் புதைபடிமம் கண்டெடுப்பு

புதுடில்லி: இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேகாலயாவின் மேற்கு காசி மலை மாவட்டத்தில் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது 10 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ‘சவுரோபாட்’ என்ற வகையைச் சேர்ந்த டைனோசரின் எலும்புப் புதை படிமங்கள் கண்டெடுக்கப்பட்டன.

‘பைஸர்’ பாதுகாப்பானது

புதுடில்லி: அமெரிக்கா பிரிட்டன் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு கடந்த மாதம் அனுமதி அளித்தது. ஆனாலும் தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு அரசு அனுமதி அளிப்பதற்கு 30 நாட்களுக்கு முன்னதாக சிறிய அளவிலான பரிசோதனைகளை அந்நிறுவனங்கள் நம் நாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்பது விதி. இந்நிலையில் ‘அமெரிக்காவின் ‘பைஸர்’ தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து இந்திய அரசு கவலை கொள்ள தேவையில்லை’ என பைஸர் நிறுவனம் நேற்று தெரிவித்தது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.