'சோன முத்தா போச்சா': நடிகை கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கம்!

ஹைலைட்ஸ்:

மேற்கு வங்கத்தில் மீண்டும் ஆட்சியை பிடித்த மம்தா பானர்ஜி.
மம்தா பானர்ஜியை விமர்சித்து நடிகை கங்கனா ரனாவத் ட்விட்.
நடிகை கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கம்.

நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது. தேர்தல் முடிவுக்கு பிறகு வெற்றி பெற்ற கட்சிகளுக்கு திரைத்துறை பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் குறித்து வன்முறை தூண்டும் விதத்தில் ட்விட் போட்ட நடிகை கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கை அதிரடியாக முடக்கியுள்ளது ட்விட்டர் நிறுவனம்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நடந்து முடிந்த தேர்தலில்
மம்தா பானர்ஜி
தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 தொகுதிகளையும், பாஜக 77 இடங்களைப் பிடித்தது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரினாமுல் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பாஜகவினருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறையில் நேற்று தங்கள் தரப்பில் 5 பேர் கொல்லப்பட்டதாகவும், தங்களின் அலுவலகத்திற்கு தீ வைத்ததாகவும் பாஜக தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

எல்லாம் வல்ல இறைவனை வேண்ட போகும் ஆஸ்கார் நாயகன்: காரணம் என்னான்னு தெரியுமா?

இது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை
கங்கனா ரனாவத்
, ‘பாஜக வெற்றி பெற்ற அசாம், புதுச்சேரி மாநிலங்களில் வன்முறை நிகழவில்லை. ஆனால், மேற்கு வங்கத்தில் வன்முறை நிகழ்கிறது. மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும். பிரதமர் மோடி மம்தா பானர்ஜியை ஒடுக்கவேண்டும்’ என பதிவிட்டிருந்தார்.

அதேபோல, கொரோனா பேரிடர் காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், கொரோனா நோயாளிகளுக்கும் உதவிக்கரம் நீட்டி வரும் நடிகர் சோனு சூட்டை, ‘அவர் ஒரு மோசடி பேர்வழி. அவர் உதவுவது பணம் சம்பாதிக்கத்தான்’ என பதிவிட்டிருந்தார். தொடர்ந்து வன்முறையையும், போலி செய்திகளையும் பகிர்ந்து வந்த நடிகை கங்கனாவின் ட்விட்டர் பக்கத்தை முடக்க கூறி பலர் ரிப்போர்ட் செய்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக ட்விட்டர் விதிமுறைகளை மீறி கங்கனா ரனாவத் செயல்பட்துள்ளதாக கூறி, நடிகை கங்கனாவின் ட்விட்டர் கணக்கை முடக்கியுள்ளது ட்விட்டர் நிறுவனம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.