டிராபிக் ராமசாமி மறைவு: ஓபிஎஸ், கனிமொழி உள்ளிட்டோர் இரங்கல்..!

சமூக ஆர்வலர்
டிராபிக் ராமசாமியின் மறைவுக்கு நெட்டிசன்கள் சமுக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அதுபோல பொதுமக்களும், அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்
ஓபிஎஸ்
தமது டிவிட்டர் பதிவில், ” முதுமையிலும் சமூகப் பிரச்சனைகளுக்கு எதிராக குரல்கொடுத்த சமூக போராளி திரு.டிராபிக் ராமசாமி அவர்கள் இன்று உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து வேதனையடைந்தேன்.

அவரை இழந்துவாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” என இவ்வாறு கூறியுள்ளார்.

கனிமொழி எம்பி பதிவு:

திரு.
டிராபிக் ராமசாமி
அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து வருந்தினேன். போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் தொடங்கி, பொதுநல வழக்குகள் வரை சமூகத்திற்கு அவரது பங்களிப்பு மிக முக்கியமானது. இவர் தொடுத்த பொதுநல வழக்குகள் பல முக்கியமான தீர்ப்புகளைப் பெற்றுத்தந்திருக்கின்றன. பொது நலனுக்காக இறுதி வரை உழைத்த அவரது அர்ப்பணிப்பு என்றென்றும் பாராட்டத்தக்கது. அவரது மறைவிற்கு, எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என இவ்வாறு கூறியுள்ளார்.

சமூக போராளி டிராபிக் ராமசாமி காலமானார்..!

டிராபிக் ராமசாமிக்கு தற்போது 87 வயதான நிலையில் திடீர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. தொடர் சிகிச்சையில் இருந்து வந்தவர் இன்று காலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் டிராபிக் ராமசாமி உயிரிழந்து விட்டதாக அரசு மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இறப்பதற்கு முன்பு அவருக்கு
கொரோனா
நெகட்டிவ் என வந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.