தண்ணீர் பாட்டில்கள் அளித்து உதவிய அடிவி சேஷ்

தண்ணீர் பாட்டில்கள் அளித்து உதவிய அடிவி சேஷ்

04 மே, 2021 – 11:24 IST

தெலுங்குத் திரையுலகத்தில் நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என பிஸியாக இருப்பவர் அடிவி சேஷ். ‘கர்மா, கிஸ்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். ‘க்ஷனம், கூடாச்சாரி,’ ஆகிய படங்களுக்கு கதை எழுதியிருக்கிறார். தற்போது ‘மேஜர்’ என்ற படத்திற்கு கதை எழுதி நாயகனாக நடித்து வருகிறார்.
ஆந்திரா, தெலங்கானாவில் தற்போது கொரோனா பாதிப்புகளுக்கு அங்குள்ள தெலுங்கு திரைப் பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த சிறு சிறு உதவிகளைச் செய்து வருகிறார்கள். அந்த விதத்தில் கிங் கோட்டி மாவட்ட மருத்துவமனை பணியாளர்களுக்கும், நோயாளிகளுக்கும் குடிப்பதற்கு தண்ணீர் வசதி இல்லை என்ற செய்தி வெளிவந்தது.
அதைப் பற்றிப் படித்த அடிவி சேஷ் உடனடியாக 850 லிட்டர் தண்ணீர் பாட்டில்களை அந்த மருத்துவமனைக்கு தனது செலவில் அனுப்பி வைத்துள்ளார். மேலும், எவ்வளவு தேவையோ அதையும் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். அந்த மருத்துவமனையில் சுமார் 300 கொரானோ நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்களாம்.
தமிழ்த் திரையுலகில் இன்னும் எந்த ஒரு பிரபலமும் தங்களால் இயன்ற உதவிகளை இந்த இரண்டாவது கொரானோ அலையில் ஆரம்பித்து வைக்கவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.