தனி ஒருவன்.. சமூக ஆர்வலர் ட்ராஃபிக் ராமசாமி காலாமானார்.. சினிமா பிரபலங்கள் இரங்கல்!

|

சென்னை: சமூக ஆர்வலர் ட்ராஃபிக் ராமசாமி காலமானார். அவருக்கு வயது 87.

தமிழ்நாட்டில் பல்வேறு பொதுநல வழக்குகள் மூலம் பல பிரச்னைகளுக்கு தீர்வு கண்டவர் ட்ராஃபிக் ராமசாமி.

இவர் கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

காலை முதல் வதந்திகள்

காலை முதலே அவரது உடல்நலம் குறித்து வதந்திகள் பரவி வந்தன. சமூக வலைதளங்களில் ட்ராஃபிக் ராமசாமி காலமானதாக பலரும் இரங்கல் தெரிவித்தனர். ஆனால் அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து வந்தனர்.

பிரபலங்கள் இரங்கல்

பிரபலங்கள் இரங்கல்

இந்நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று மாலை ட்ராஃபிக் ராமசாமி சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் வசந்த்

நடிகரும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்பியுமான விஜய் வசந்த் டிவிட்டரில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உடல் நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காலமானார். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

மோகன் ராஜா

இதேபோல் இயக்குநர் மோகன் ராஜா பதிவிட்டுள்ள டிவிட்டில், தனி ஒருவன்.. அவருடைய கோபத்தை நான் பெரிதும் மதிக்கிறேன்.. அவருக்கு சல்யூட் செய்கிறேன்.. அவரது ஆத்மாவுக்கு நாம் அனைவரும் கொடுக்கக்கூடிய ஒரே மரியாதை உத்வேகம் பெறுவது தான் என குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் ரவீந்திரன்

இயக்குநர் ராகுல் ரவீந்திரன் பதிவிட்டுள்ள டிவிட்டில், இதை நான் 2016 இல் என் பிளாக்கில் எழுதினேன். இன்று மீண்டும் போஸ்ட் செய்கிறேன். நான் வாக்களித்த ஒரே வேட்பாளர் இன்று இல்லை. அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். ட்ராஃபிக் ராமசாமி நினைவுகூரப்படுவார் என பதிவிட்டுள்ளார்.

நடிகர் பிரசாந்த்

இன்று ஒரு பெரிய மனிதரை இழந்துவிட்டோம் ரிப் சார்.. தமிழகம் முழுவதும் செய்தி கட்டுரைகளில் தவறாமல் இடம்பெறும் ஒரு பெயர், ட்ராஃபிக் ராமசாமி இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக 400 பொதுநல வழக்கை தாக்கல் செய்தவர் என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.