தமிழகத்தில் பேருந்து சேவை ரத்தாகுமா? அரசின் முடிவால் அதிர்ச்சி!

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் புதுப்புது உச்சங்களை எட்டி வருகிறது. தினசரி பாதிப்பு 21ஆயிரத்தை எட்டியுள்ளது. அறுபதாயிரம் வரை செல்லக்கூடும் என அதிகாரிகள் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் மே 6ஆம் தேதி தமிழ்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளன. காய்கறிகடைகள், பலசரக்கு கடைகள் 12 மணிக்கு வரை இயங்கும் என்றும் பிற கடைகள் 20ஆம் தேதி வரை திறப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏன் திடீர் ஊரடங்கு அறிவிப்பு? ஸ்டாலின் காட்டிய க்ரீன் சிக்னல்!

மேலும்
பயணியர் இரயில்
, மெட்ரோ இரயில், தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பொது மக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

முன்னதாக இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது
ஆம்னி பேருந்து
உரிமையாளர்களில் பெரும்பாலானோர் தங்கள் பேருந்துகளை இயக்கப்போவதில்லை என்று அறிவித்தனர். வெகு சில பேருந்து உரிமையாளர்கள் மட்டும் நேரத்தை மாற்றி தொலைதூரத்திற்கு செல்லும் ஆம்னி பேருந்துகளை காலை முதலே இயக்க முடிவு செய்து அதன்படி இயக்கி வந்தனர்.

சூப்பர் நியூஸ்: வந்தது பணி நிரந்தர ஆணை! செவிலியர்கள் உற்சாகம்!

அதேசமயம் அரசு விரைவுப் பேருந்துகள் மதியம் வரை இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது 50 சதவீதம் பயணிகளுடன் மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளதால் இதனால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

வரிகள் ஏதும் ரத்து செய்யப்படவில்லை, டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது இதனால் ஏற்கெனெவே பாதிப்புக்குள்ளாகியுள்ளோம். தற்போது 50 சதவீத பயணிகளை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று கூறுவதால் வருவாய் பாதிப்புக்குள்ளாகும். நஷ்டத்தில் பேருந்துகளை இயக்க வேண்டிவரும் என்கிறார்கள்.

ஊரடங்கில் எதெற்கெல்லாம் அனுமதி? தமிழக அரசு அறிவிப்பு!

ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்க தலைவர் அன்பழகனிடம் இது குறித்து கேட்ட போது, “நேற்று அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் குறித்து நிர்வாகிகள் உடன் இன்று மதியம் 1 மணியளவில் ஆலோசிக்க உள்ளோம். இந்த கூட்டத்திற்கு பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.