திமுக சட்டமன்றக்குழு தலைவராக ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு!

தமிழக சட்டமன்ற தேர்தலில்
திமுக
கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக தனித்து 125 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. வருகிற 7 ஆம் தேதி திமுக தலைவரும், முதல்வர் வேட்பாளருமான
ஸ்டாலின்
முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ளார்.

இந்நிலையில்,
திமுக தலைவர்
ஸ்டாலின் தலைமையில் இன்று சட்டமன்ற குழு கூட்டப்பட்டது. இந்த கூட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் 8 பேர் உட்பட 133 பேர் பங்கேற்றனர்.

அதனை தொடர்ந்து திமுகவின் அனைத்து எம்எல்ஏக்களின் முன்னிலையில் ஸ்டாலின் சட்டமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

”6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை”… மக்களிடம் வேண்டிக்கொள்ளும் ஸ்டாலின்..!

சட்டமன்றத்தின் புதிய தலைவராக முக ஸ்டாலினை திமுக பொது செயலாளர்
துரைமுருகன்
முன்மொழிந்தார்.திமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மு.க. ஸ்டாலின், நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.