திமுக சட்டமன்ற குழு தலைவராக மு.க ஸ்டாலின் தேர்வு – நாளை ஆளுநரை சந்திக்கிறார்

திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கூட்டணி எம்.எல்.ஏக்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். துரைமுருகன், டி.ஆர். பாலு, கே.என். நேரு, பொன்முடி, எ.வ. வேலு, ஆர்.எஸ். பாரதி உள்ளிட்ட 133 எம்.எல்.ஏக்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் திமுக சட்டமன்றக் கட்சித்தலைவராக மு.க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சட்டமன்ற குழு தலைவராக தேர்வானவுடன் நாளை ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைகோருகிறார் ஸ்டாலின். அதனைத்தொடர்ந்து 7ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் தமிழக முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார்.
7ஆம் தேதி காலை ஆளுநர் மாளிகையில் திறந்தவெளியில் குறைந்த அளவு பங்கேற்பாளர்களுடன் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. புதிய சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு சுமார் 300 பேர் வரை மட்டுமே விழாவில் பங்கேற்கவுள்ளனர். கொரோனா பரவல் தடுப்பு கருதி ஆளுநர் மாளிகையில் எளிமையாக பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.