தேவையின்றி அடிக்கடி சி.டி. ஸ்கேன் எடுத்தால் புற்றுநோய் வரும் !!

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை பாதிப்பு அதிகமாக உள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் பகுதியளவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா நோய்த்தொற்றை கண்டறிய சி.டி.ஸ்கேன் எடுப்பது வழக்கம்.

இந்நிலையில், தேவையின்றி அடிக்கடி சி.டி. ஸ்கேன் எடுக்க வேண்டாம் என்றும், சி.டி. ஸ்கேன் அடிக்கடி எடுத்தால் புற்றுநோய் வரும் என்றும் எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா நோய்த்தொற்றின் லேசான அறிகுறிகளுக்காக சி.டி. ஸ்கேன் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றார். சி.டி. ஸ்கேன் அதிகமாக பயன்படுத்துவதால் கதிர்வீச்சின் வெளிப்பாடு அதிகரிக்கும் என்றும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் அவர் கூறினார்.

ஒரு முறை சிடி-ஸ்கேன் எடுப்பது, 300 முதல் 400 முறை இதய எக்ஸ்-ரே எடுத்ததற்கு சமமாகும். இளைய வயதினருக்கு அடிக்கடி சிடி-ஸ்கேன் எடுப்பது, பின்னாளில் அவா்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கதிா்வீச்சுக்கு உங்களை நீங்களே ஆட்படுத்திக் கொள்வது, கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

எனவே, லேசான கொரோனா பாதிப்புக்கு ஆளானவா்களுக்கு ஆக்சிஜன் அளவு சீராக இருக்கும் நிலையில், சிடி-ஸ்கேன் எடுப்பது அவசியமே இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.மேலும், அறிகுறிகள் இன்றி லேசான கொரோனா பாதிப்புக்கு ஆளனவா்களுக்கு, சிடி-ஸ்கேனில் தென்படும் பாதிப்புகள் மருத்துவ சிகிச்சை இன்றி தானகவே சரியாகிவிடும் என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு பாதிப்பு உடையவா்கள் மட்டுமே சிடி-ஸ்கேன் எடுக்க வேண்டும். சந்தேகம் இருந்தால், அவா்களுக்கு மாா்புப் பகுதி எக்ஸ்-ரே எடுப்பதும் போதுமானதாக இருக்கும்.அதுபோல, உயா் காய்ச்சல் இல்லாத, ஆக்சிஜன் அளவு சீராக இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு உயிரி குறியீட்டுக்காக ஏராளமான ரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டாம்.    

மிதமான கரோனா பாதிப்பு உடையவா்களுக்கு மருந்துகள்கூட தேவையில்லை என்று சிகிச்சை நடைமுறை வழிகாட்டுதல்கள் தெளிவுபடுத்துகின்றன. தேவைப்பட்டால் இவா்மெக்டின் அல்லது ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். அதையும் அதிகமாக எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியமில்லை எனவும் ரண்தீப் குலேரியா  கூறினார்.

NEWSTM.IN


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.