நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 500 கடந்தது: குணமடைந்தோர் 967

இலங்கையில் இன்று (04) காலை வரையில் 1,923 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக covid-19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இவர்களில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த 09 இலங்கையரும் வெளிநாட்டொருவரும் உள்ளடங்குவர்.
ஏனைய 1,913 பேரும் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்கள் என்பதுடன், இவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 529 ஆகும்.

இதற்கமைய களுத்துறை மாவட்டத்திலிருந்து 264 பேர் மற்றும் கம்பஹா மாவட்டத்திலிருந்து 232 பேரும் பதிவாகியுள்ளனர். ஏனைய 888 பேரும் நாட்டின் ஏனைய மாவட்டங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று (04) காலை வரையிலான மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் கொத்தணி மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 90,637 ஆகும். ஏனைய கொத்தணிகளிலிருந்து அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,879 ஆகும். இவர்களில் 96,247 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். அத்துடன் புத்தாண்டின் பின்னர் பதிவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 15,316 பேர் ஆகும்.

இதேவேளை, இன்று (04) காலை வரையிலும் இலங்கையில் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 113,675 பேர் என்பதுடன், அவர்களில் 98,209 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். அத்துடன் இன்று காலை (04) வரையிலும் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை சிகிச்சை நிலையங்களில் 14,757 தொற்றாளர்கள் மேலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இன்று (04) காலை 6.00 மணி வரையிலான கடந்து 24 மணித்தியாலங்களுக்குள் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை சிகிச்சை நிலையங்களிலிருந்து 967 பேர் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இதேவேளை, இன்று (04) காலை வரையிலான கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் கொவிட் வைரஸ் தொற்று பாதிப்பினால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் மோதர, புலத்சிங்கள, திவுலபிட்டிய, நீர்கொழும்பு,நுவரெலியா, மாலம்பே, மாவில்மட, பொரல்ல, பாணந்துறை ஜா-எல, நிட்டம்புவ மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

இதன்படி, இன்று (04) காலை வரையிலும் இலங்கையில் கொவிட் வைரஸ் தொற்று பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 709 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்றைய தினம் வரையிலும் முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் 110 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 10,981 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் இன்று (04) காலை வரையிலும் குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டிய மற்றும் பன்னல பொலிஸ் பிரிவுகள், தித்தவெல்கம, கும்புக்கெடே கிராம சேவகர் பிரிவுகள், நிராவிய, நிகதலுபொத, மற்றும் உடுபதலாவ ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமை படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை களுத்துறை மாவட்டத்தில் அதிகாரிகொட,மிரிஸ்வத்த, பெலவத்த வடக்கு மற்றும் பெலவத்த கிழக்கு, பொல்லுன்ன, இங்குருதலுவ, மிதலான, மொரபிட்டிய, பெலீத, ஹெந்திகல்ல, மொரபிட்டிய வடக்கு, வெல்லாவிட்ட தெற்கு, மாகலந்தாவ, போதலாவ, கடுகெலே, வெல்மீகொட மற்றும் பஹல ஹேவஸ்ஸ, பின்னவத்த மேற்கு, நரம்பிடிய மற்றும் பண்டாரகம கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள், கம்பஹா மாவட்டத்தில் பொல்ஹென,ஹீரளுகெதர, கலுஅக்கல, அஸ்வென்னவத்த கிழக்கு மற்றும் அல்விஸ்வத்த ஆகிய கிராம சேவகர் பிரிவுகள், திருகோணமலை மாவட்டத்தில் பும்புஹார், உப்புவெலி, மட்கோச் கோவிலடி, லிங்கநகர், காவட்டிகுடா, சீன துறைமுகம், ஓர்ஸ் ஹில் மற்றும் அன்புவெளிப்புறம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகள்,

காலி மாவட்டத்தில் இம்பலகொட, கடுதம்பே, கொடஹேன மற்றும் தல்கஸ்கொட கிராம சேவகர் பிரிவுகள், பொலன்னறுவை மாவட்டத்தில் சிரிகெதே மற்றும் சருபிம ஆகிய கிராம சேவகர் பிரிவுகள், மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ள, கலேவெல, மாத்தளை மற்றும் நாவுல ஆகிய பொலிஸ் பிரிவுகள் மற்றும் பல்லேகும்புற, அலுகொல்ல கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம், அம்பாறை மாவட்டத்தில் குமாரிகம, தெகியத்த கண்டி மற்றும் கதிரபுர கிராம சேவகர் பிரிவுகள், மொனராகலை மாவட்டத்தில் வெல்லவாய, வெஹரயாய, கொட்டம்கம்பொக்க, ரஹதன்கம, கல் அமுனு மற்றும் ஹெலமுல்ல கிராம ஆகிய கிராம சேவகர் பிரிவுகள்,
கொழும்பு மாவட்டத்தில் நம்பணுவ, கொரகபிடிய, தாம்பே, படகத்தர வடக்கு, பெலவத்த மேற்கு, பெலவத்த கிழக்கு, கெஸ்பேவ தெற்கு, மாகன்தன கிழக்கு, மாவித்தர வடக்கு, மடபான, எரவ்வல வடக்கு மற்றும் உக்கல்ல ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் ஹப்புகொட கிராம சேவகர் பிரிவு மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் நில்தண்டாஹின்ன மற்றும் ரத்மெட்டிய கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தியவீரசிங்க சதுக்கம் என்பன தனிமை படுத்தப்பட்டுள்ளதாக covid-19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.