பீகாரில் மே 15 வரை முழு ஊரடங்கு அமுல்

பாட்னா, மே.4

பீகாரில் வரும் மே 15ந் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் லாக்டவுன் என்று அரசு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் ஐகோர்ட் தலையிட்டு நடவடிக்கை எடுக்க நேரும் என்று சொல்லப்பட்ட நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்னதாக சக அமைச்சர்கள், உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அறிவிப்பை வெளியிட்டார்.

ஊரடங்கு நாட்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் பற்றி நெருக்கடி மேலாண்மை குழு விரைவில் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் 11,407- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் நேற்று 82 பேர் உயிரிழந்தனர். பீகாரில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 9-ஆயிரமாக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 227 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்து 449 பேர் பலியாகியுள்ளனர்.

ஏற்கனவே மார்ச் 15 வரை இரவு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. வயது வந்த அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.